உள்ளூர்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்த உயிர் அச்சுறுத்தலும் இல்லை!

  • December 27, 2024
  • 0 Comments

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 […]

உள்ளூர்

தமிழக மீனவர்கள் 17 பேருக்கும் விளக்கமறியல்!

  • December 25, 2024
  • 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த மீனவர்களை இன்று நண்பகல் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்>இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா https://www.youtube.com/shorts/_ufGT4fPF9o?feature=share

உலகம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி!

  • December 23, 2024
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள அதே வேளை 107,573 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இந்நிலையில் நிலையில் வடக்கு காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலியப் […]

இந்தியா

எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

  • December 23, 2024
  • 0 Comments

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]

உள்ளூர்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

  • December 23, 2024
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை […]

உள்ளூர்

மின்சாரம் தாக்கி பசுவொன்று பலியானது, யார் கரணம்? காணொளி இணைக்கப்பட்டுள்ளது

  • December 18, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்திக்கருகில மின்சாரம் தாக்கி நேற்று மாலை பசுவொன்று பலியானது அது தொடர்பில் பிரதேச வாழ் மக்கள் மின்சாரம் இவ்வாறு வீதியில் வந்தால் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு என மின்சார சபை உத்தியோகஸ்த்தரை மக்கள் வினாவினர் மின்சார சபையா? மாநகர சபையா? டெலிகொம் நிறுவனமா? யார் காரணம்.  

உலகம்

பிரான்ஸ் மயோட்டா தீவை தாக்கிய புயலால் பலி எண்ணிக்கை ஆயிரங்களை கடக்கலாம்

  • December 16, 2024
  • 0 Comments

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த […]

உலகம்

கனடாவில் வரி விடுமுறை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • December 16, 2024
  • 0 Comments

கனேடிய மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதி நாட்கள் தொடக்கம் இந்த வரிச்சலுகை அதாவது வரி விடுவிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிகளுக்கு இந்த வரிசலுகை அமுலில் இருக்கும்என தெரிவிக்கப்படுகின்றது இதன் மூலம் நாட்டில் வரி செலுத்துவோர் சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல அதிகரிப்பு

  • December 16, 2024
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர் விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

  • December 16, 2024
  • 0 Comments

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம் யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி! மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே  இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் https://youtu.be/2svXrqbsfvc