உள்ளூர் முக்கிய செய்திகள்

பாணந்துறையில் இன்று காலை துப்பாக்கி சூடு ஒருவர் காயம்.சந்தேக நபர் தப்பியோட்டம்

  • July 11, 2025
  • 0 Comments

இன்று காலையில், ஹிரண பொலிஸ் பிரதேசத்தின் மாலமுள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கி சுடுதலால் காயமடைந்த நபர் பானந்துரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் காயமடைந்தவர் 32 வயது, மாலமுள்ள பகுதியில் வசிப்பவர். துப்பாக்கி சூட்டிற்கான காரணமும் சந்தேக நபர்களின் தொடர்பும் இதுவரை தெரியவில்லை; துப்பாக்கி சூடுக்கு பிஸ்டல்ரக துப்பாக்கி […]

உள்ளூர்

இலங்கைக்கு அமெரிக்கா வரியை 30 வீதமாக அதிகரித்தது

  • July 10, 2025
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]

உள்ளூர்

யாழில் மனைவி தாய்வீட்டிற்கு சென்றதால் கணவன் உயிர்மாய்ப்பு

  • July 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி ஆனையிறவில் டிப்பரும் ஹையேஸ் வாகனமும் விபத்து பயணிகள் படுகாயம்

  • July 8, 2025
  • 0 Comments

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையேஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் ஹையேஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காயம் அடைந்த […]

உள்ளூர்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் மாற்றம்!

  • June 30, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் […]

உள்ளூர்

கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

  • June 29, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் […]

உலகம்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

  • June 27, 2025
  • 0 Comments

  ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை […]

கனடா

ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் துப்பாக்கி சூடு:2 பேர் படுகாயம்!

  • June 26, 2025
  • 0 Comments

டொராண்டோ ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், டான் மில்ஸ் சாலை மற்றும் செயின்ட் டெனிஸ் டிரைவ் சந்திக்குமிடத்தில், எக்லிங்டன் அவென்யூ அருகே உள்ள பகுதியில், இன்று அதிகாலை 2 மணிக்கு முன் நிகழ்ந்துள்ளது. 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள், உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் இருந்தாலும், மிகுந்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக […]

உள்ளூர்

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் இந்நாள் எம்பிக்களை சந்தித்தார்

  • June 26, 2025
  • 0 Comments

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்றரவு (25-06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தொடர்பில் டிரம்ப் ஒன்றும் அமெரிக்க ஊடகங்கள் மற்றொன்றும் சொல்கின்றன

  • June 25, 2025
  • 0 Comments

அமெரிக்கா கடந்த வாரம் ஈரானின் அணு உள்கட்டமைப்புகளின் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் அந்த மையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ‘ஈரானின் அணுத் திட்டம் மீண்டும் இயங்கவே இயலாத வகையில் அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேறு யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை’ என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை (Defense Intelligence Agency – DIA) தயாரித்த மதிப்பீட்டை மேற்கோளாகக் கொண்டு தாக்குதல்களால் ஈரானின் […]