உள்ளூர்

வடக்கில் 10 பொலிஸ் நிலையங்களை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதா?

  • June 14, 2025
  • 0 Comments

வடக்கில் சுமார் 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இனந்தெரியாத நபர் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸாhர் விசாரணைகள் ஆரம்பித்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் […]

உள்ளூர்

நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகள் பற்றாக்குறையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

  • June 14, 2025
  • 0 Comments

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பல […]

உள்ளூர்

இந்திய மீனவர்களை சுட்டு பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனம் வேண்டுகோள்

  • June 6, 2025
  • 0 Comments

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது […]

உள்ளூர்

பேரவையும் சங்கும் சங்கமம், புதிய கூட்டணி ஒப்பந்தம்

  • June 2, 2025
  • 0 Comments

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சிறைச்சாலையின் அச்சுபிரிவில் மகிந்தானந்தாவும் நளினும் வேi செய்கின்றார்கள்

  • June 1, 2025
  • 0 Comments

நீதிமன்றத்தினால் கடுழிய சிறைச்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கும் நளின் பெர்ணான்டோவிற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுபிரிவில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரிகள் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளும் கொலை மற்றும் பாலியல்வன்முறை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சப்பல் பிரிவிலிருந்து இருவரையும் பிரித்து ஒன்றாக வைத்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருவரினதும் பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இருவருக்கும் அரசியல் எதிரிகள் இருக்ககூடும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலை […]

உள்ளூர்

பிரதமராக பதவிக்கு அமைச்சர் பிமலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவிப்பு

  • June 1, 2025
  • 0 Comments

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்கள் விடுதலை முன்னணிக்கும்,தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் […]

உள்ளூர்

அமைச்சரவை மாற்றம் பிற்போடப்படுகின்றதா?

  • June 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று […]

உள்ளூர்

கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி கண்டுபிடிப்பு!

  • May 31, 2025
  • 0 Comments

கற்பிட்டி – உச்சமுனை தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் என்பன நேற்று முன்தினம் (29) கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி விஜய கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர் லக்ஸ்மன் றன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போதுஇ காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்றும்இ பாவிக்கப்படாத தோட்டாவொன்றும்இ வெற்றுத் தோட்டா ஒன்றும் […]

உள்ளூர்

கனடாவில் மற்றொரு தமிழின அழிப்பு நினைவகம் அமைக்கப்படவுள்ளது

  • May 24, 2025
  • 0 Comments

கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேறியது கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர்

காணிகள் அபகரிப்பு வர்த்தமானியை வாபஸ் பெறுவது தொடர்பில் அரசாங்கம் மறுபரிசீலனை செய்வதாக உறுதி

  • May 24, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என பிரதமருடனான சந்திப்பில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதியாக வலியுறுத்தியதை அடுத்து, இதுபற்றி காணி அமைச்சின் அதிகாரிகளுடன் ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும் என அரசாங்க தரப்பு உறுதியளித்துள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் […]