உள்ளூர் முக்கிய செய்திகள்

தனியார் துறைகள் வளர்ச்சிக்கு உலக வங்கி குழுவிடம் யாழ். அரசாங்க அதிபர் கோரிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

தனியார் துறைகளின் வளர்ச்சி ஊடாக இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், உடனடி நடவடிக்கைகள் எடுக்க உலக வங்கி குழுவிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை, கடந்த புதன்கிழமை (21 மே) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போது வெளியிடப்பட்டது. இதில் உலக வங்கி குழுவினர், மாவட்ட அரசாங்க அதிபருடன் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். முக்கிய அம்சங்கள்: தொழில் வாய்ப்புகள்: தனியார் முதலீடுகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கே பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

  • May 22, 2025
  • 0 Comments

சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு செய்திகளை அனுப்பியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அளித்த முறையான புகாரைத் தொடர்ந்தும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், 62 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (21) காவலில் வைக்கப்பட்டார். பொலிஸாரின் தகவலின் படி, இந்தச் செய்திகள் நீதிபதிக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியதால், விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ‘சட்டமன்ற வழக்கறிஞரால் உயர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அபுதாபியில் உருவாகின்றது உலகின் முதல் ஏ.ஐ நகரம். அனைத்து கைவிரலில்

  • May 21, 2025
  • 0 Comments

உலகின் முதல் யுஐ நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வாழ்க்கையை மறுவரையறை செய்யும் குறிக்கோளுடன் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து அமைப்புகள், ஸ்மார்ட் வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி என அனைத்திற்கும் இந்த நகரம் ஏ.ஐ. அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. செயற்கை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலசந்திரன் இன்றும் உயிர்வாழ்கின்றான், என்றென்றும் உயிர்வாழ்வான்- நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் பஞ்சாபின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

  • May 19, 2025
  • 0 Comments

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங்தெரிவித்துள்ளார். மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப்பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது. பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன் இந்த […]

இந்தியா உலகம் முக்கிய செய்திகள்

பாக்கிஸ்தானில் 9 நகரங்களில் ட்ரோன் தாக்குதல் – பாகிஸ்தானில் மக்கள் அச்சம்

  • May 8, 2025
  • 0 Comments

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை மத்திய அரசு நடத்தியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள வால்டன் விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடந்தது. இதில் ராணுவத்தினர் 4 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே லாகூரை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் 8 நகரங்களில் டிரோன் தாக்குதல்கள் […]

முக்கிய செய்திகள்

இந்தியாவில் பதற்றம் 18 விமான நிலையங்கள் மூடல் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

  • May 7, 2025
  • 0 Comments

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பதற்றத்தை தொடர்ந்து வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று (புதன்கிழமை) […]

உள்ளூர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது

  • May 6, 2025
  • 0 Comments

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது அதன்படி இந்த முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன அதன்படி, இந்தத் தேர்தலில் 8,287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வாக்குப் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் பிரச்சாரம் செய்தவர் கைது

  • May 6, 2025
  • 0 Comments

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலிஸார், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த நபரை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளரான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில்; மே தினம் கலைவிளையாட்டு நிகழ்வுகளாக மக்கள் கொண்டாடினர்

  • May 1, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்று மே தின நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினர். அந்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மே தினத்தை கொண்டாடியுள்ளனர். வங்காலை மீனவ சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் வங்காலை விளையாட்டுக் கழகம் […]

உள்ளூர்

கொழும்பில் மனைவியை துண்டு துண்டாக பொதி செய்த கணவன் கைது

  • April 28, 2025
  • 0 Comments

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. காணாமல்போன பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் இணைந்து […]