உள்ளூர் முக்கிய செய்திகள்

தலைமன்னாருக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குமான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுமா?

  • March 22, 2025
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். கடந்த […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் உடல்நிலை தேறியுள்ளது. ஒளிப்படம் வெளியிட்ட வாடிகன்

  • March 17, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து மூவர் காயம்

  • March 17, 2025
  • 0 Comments

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று (16-03) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பளை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

இந்தியா

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக மீண்டும் சம்பியனானது

  • March 16, 2025
  • 0 Comments

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் நேற்று (15-03) இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 149 ஓட்டங்களைத் தக்கவைத்து 8 ஓட்டங்களால் வெற்றியிட்டிய மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியன் மகுடத்தை சூடியது. 2023இல் ஆரம்பமான மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் முதலாவது அத்தியாயத்திலிருந்து தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி, மீண்டும் 2ஆம் இடத்ததுடன் திருப்தி அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவரக்ளில் […]

உலகம்

ஏமனின் ஹவுதிகள் மீது அமெரிக்கா நடத்திய கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

  • March 16, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது. இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தொடர் கொலைகளில் மற்றொன்று காலியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

  • March 14, 2025
  • 0 Comments

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தோட்டை பகுதியில் இன்று மாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை, அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

3 மொழிகளை மட்டுமல்ல பல மொழிகளை ஊக்குவிக்கப்போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

  • March 6, 2025
  • 0 Comments

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்றும், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமே… உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்… அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு […]

முத்தத்தில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி உலகம் முக்கிய செய்திகள் வினோத உலகம்

முத்தத்தில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி விவாகரத்து செய்துள்ளனர்

  • March 6, 2025
  • 0 Comments

தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய்- டிரமாராட் தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மிக நீண்ட முத்தத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தனர். இந்த தம்பதி மொத்தம் 58 மணிநேரம் 35 நிமிடங்கள், 58 வினாடிகள் முத்தம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர். இந்த சாதனை மூலம் பிரபலமான இந்த தம்பதியினர் தற்போது விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காதலுக்கும், அர்ப்பணிப்புக்கும் நாங்கள் எடுத்துக்காட்டாக விளங்கினாலும், தவிர்க்க முடியாத சில […]

உலகம் முக்கிய செய்திகள்

எந்தவகையிலான போருக்கும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா அறிவித்துள்ளது

  • March 6, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார். அப்போது அவர்,’ அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 79 வயதுடைய தாயொருவர் உயிரிழந்துள்ளார்

  • March 5, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிப பெண், கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த மாதம் 17ம் திகதி சென்றுள்ளார். உதவி தொகை பெற்ற பின் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேளை பெண்ணொருவர், […]