உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள் வெட்டு

  • March 4, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர். அந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் , […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசை ஐ.எம்.எப் பாராட்டியுள்ளது

  • March 4, 2025
  • 0 Comments

இலங்கையின் கையிருப்புக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் அரைவாசியை அடைந்திருப்பதாகவும், இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் […]

உக்ரைனில் சமாதானத்தை ஏற்படுத்த பிரான்சும் பிரிட்டனும் முயற்சி

  • March 3, 2025
  • 0 Comments

உக்ரைனிற்கான சமாதான உடன்படிக்கையை உருவாக்குவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற 19 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் இதனை அறிவித்துள்ளார். உக்ரைனுடன் இணைந்து ஐரோப்பிய கூட்டணி டிரம்ப் முன்வைத்துள்ள சமாதான திட்டத்திற்கு மாற்றீடான ஒன்றை உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு படையணியொன்றை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் இணைந்து இந்த திட்டத்தினை உருவாக்குவார்கள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்

  • March 2, 2025
  • 0 Comments

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைதீவில் நடமாடும் கசிப்பு பார் நடத்திய 21 வயதுடைய இருவர் கைது

  • March 1, 2025
  • 0 Comments

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (28-02-2025) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்த போது இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மலையகத்திற்கான தொரூந்து சேவை பாதிப்பு

  • March 1, 2025
  • 0 Comments

பதுளை ரயில் நிலையத்திற்கும் ஹாலி எல தொரூந்து நிலையத்திற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையகத்திற்கான தொரூந்து சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பிலிருந்து பதுளைக்கான தொரூந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு கோட்டை தொரூந்து நிலையத்திற்கும் ஒருகொடவத்தைக்கும் இடையில் உள்ள புளுமென்டால் தொரூந்து கடவையில் திருத்த வேலை இடம்பெறுவதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த பகுதி மூடப்பட்டிருக்கும் என தொரூந்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டின் நீதிமன்றங்களில் 11,31,818 வழக்குகள் நிலுவையில்; உள்ளது- நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழு

  • March 1, 2025
  • 0 Comments

நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய தயாரென ஜப்பான் தெரிவித்துள்ளது

  • February 27, 2025
  • 0 Comments

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் ((Isomata Akio இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஜப்பானிய அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உதவித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இசொமதா அகியோ தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் போராட்டம்

  • February 27, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். ‘தாண்டாதே தாண்டாதே எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே […]

இந்தியா

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது

  • February 27, 2025
  • 0 Comments

இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. சந்திபூரில் நடைபெற்ற இந்த சோதனையில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. ஆரம்பத்தில் ஏவுகணை ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்குள் பெரிய இலக்கை நோக்கிச் சென்றது. பிறகு இதை ஏவிய விமானி சிறிய மறைக்கப்பட்ட இலக்கைத் தேர்ந்தெடுத்தார். எனினும், ஏவுகணை மாற்றப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கியது. பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள […]