உலகம்

இஸ்ரேலின் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் – கத்தார் பிரதமர் வலியுறுத்தல்

  • September 15, 2025
  • 0 Comments

இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாடு காட்டுவதை நிறுத்தி, அதன் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துர் ரஹ்மான் அல் தானி வலியுறுத்தினார். செப்டம்பர் 14 ஆம் திகதி, டோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட முன்னெப்போதும் இல்லாத வான்வழித் தாக்குதலை அடுத்து, கத்தார் ஏற்பாடு செய்த அவசர அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் முன்னோடி கூட்டத்தில் […]

கட்டுரை

அரசுப் பண நிதி தவறான பயன்பாட்டைச் சுற்றிய அரசியல் வாக்குவாதம் தீவிரம்

  • August 29, 2025
  • 0 Comments

அரசாங்க அரசியல்வாதிகள், தாங்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக அரசுப் பண நிதியை தவறாக பயன்படுத்தவில்லை என்று மக்களை நம்ப வைக்க பெரிதும் முயற்சிக்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்கு முரண்பட்டு, உண்மையில் அது நடந்தேறியதாக உறுதியாகக் கூறுகின்றன. அவை வாதிடுவதாவது, 2023இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட செலவுகளை, அந்நாடாளுமன்றப் பொதுமக்கள் முன்னணி (NPP) அரசாங்கம் “அரசுப் பண நிதி தவறான பயன்பாடு” என்று சுட்டிக்காட்டியிருந்தால், அதேபோன்று 2024 டிசம்பரில் தற்போதைய ஜனாதிபதி அனுர […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

  • August 2, 2025
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கு மாகாண பிரதம செயலாளர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தை இந்தியா உன்னிப்பாக பார்க்கின்றது

  • July 12, 2025
  • 0 Comments

ஜெனரல் அசீம் முனீர் அண்மையில் இலங்கைக்கு முக்கியமான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரது வருகை சாதாரண மரியாதை விஜயமாக மட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் உள்ள பெரிய நிலைத்திறனியல் நோக்கங்களை மேற்கொண்டதாக இந்தியா பார்க்கின்றது இந்த விஜயத்தின் போது அவர் இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ பயிற்சி, உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக வெளியிடப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வை இந்திய பாதுகாப்பு […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் வெளிப்படத்தன்மை இருக்குமென்கிறார் பிரதமர் ஹரணி

  • July 11, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லையென பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சமிந்த விஜேசிறி தனது கேள்வியில், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி ஆனையிறவில் டிப்பரும் ஹையேஸ் வாகனமும் விபத்து பயணிகள் படுகாயம்

  • July 8, 2025
  • 0 Comments

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையேஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் ஹையேஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காயம் அடைந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதலின் இலக்கு என்ன? ஆட்சியை கவிழ்ப்பதா அணுசக்தியை அழிப்பதா?

  • June 14, 2025
  • 0 Comments

இரானின் அணுசக்தி மூலம் இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனை அழிப்பதே வெள்ளிக்கிழமை தான் நடத்திய தாக்குதல்களின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அந்த பெரிய இலக்கு. இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஒரு சங்கிலித் தொடர் போன்ற எதிர்வினையை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் ஏற்படும் அமைதியின்மை இறுதியில் […]

உள்ளூர்

இந்திய மீனவர்களை சுட்டு பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனம் வேண்டுகோள்

  • June 6, 2025
  • 0 Comments

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் வேலை வேண்டி போராட்டம்

  • June 2, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டி பரீட்சை நியமனம் வழங்கக் கோரியும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரச நியமனங்களில் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் போது, பேச்சுவார்த்தை போதும் தொழிலை தா?,அரச சேவையில் கிழக்கு மாகாணத்தை புறக்கணிப்பது ஏன், பரீட்சை வேண்டாம் தகுதிகான் அடிப்படையில் வேலை போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர்

புhடசாலைகளில் சிறுவர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்படுவது அதிகரித்துள் பிரதமர் ஏற்பு

  • May 28, 2025
  • 0 Comments

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27-05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து […]