முக்கிய செய்திகள்

திருமலையில் விபத்து, சாரதி உறக்கம், 2 குழந்தைகள், 3 பெண்கள்; உள்ளிட்ட 6 பேர் காயம்

  • January 25, 2025
  • 0 Comments

திருகோணமலை சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி நேற்று (24) விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி 10 பயணிகளுடன் பயணித்த வேன் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன்னால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந் டிமோ பட்டா வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் […]

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் போட்டுதள்ளியது?

  • January 23, 2025
  • 0 Comments

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி; சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஸேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து […]

இந்தியா

மனைவியை கொலை செய்து அவயங்களை வெட்டி குக்கரில் வேக வைத்த கணவன் கைது

  • January 23, 2025
  • 0 Comments

ஐதராபாத்தில் மனைவியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 35 வயதுடைய தனது மகள் ஒருவாரமாக காணவில்லை என்று பெற்றோர் போலீசில் முறைப்பாடு செய்தனர் அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று கணவனுக்கும் […]

முக்கிய செய்திகள்

சட்டத்தரணி சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு சிறிதரன் எம்பி பாராளுமன்றத்தில் முழக்கம்

  • January 22, 2025
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார் என்ற தொனிப்பிட சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடுவதற்காக பாராளுமன்றம் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கு சுமந்திரனிடமிருந்து நீதி வேண்டி நேற்று பாராளுமன்றத்pல் சபாநாயகரிடம் விநயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் […]

முக்கிய செய்திகள்

கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில் போன்று வேடமிட்டது தொடர்பில் விளக்கம் கொடுத்துள்ளோம்- வடமாகாண பட்டதாரிகள்

  • January 21, 2025
  • 0 Comments

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகதழிராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் […]

உலகம்

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட 3 பிணைக்கைதிகளும் இஸ்ரேல் திரும்பினர்

  • January 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது […]

முக்கிய செய்திகள்

21 ஆயிரம் பொலிஸாரே உள்ளனர், ஆகையால் அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்- ஜனாதிபதி

  • January 19, 2025
  • 0 Comments

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த, வெட்டுமகட பாகிஸ்தான் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். ‘நாங்கள் நவம்பர் 21 ஆம் தேதி அமைச்சரவையில் 21 அமைச்சர்களுடன் பதவிப் […]

இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது தாக்குதல்

  • January 18, 2025
  • 0 Comments

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது. மும்முனை போட்டி என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் […]

உலகம் புதியவை வினோத உலகம்

சீதனம் கொடுத்து திருமணம் செய்த மாப்பிள்ளை

  • January 18, 2025
  • 0 Comments

நைஜீரிய நாட்டில் ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது வழக்கம் என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசியுங்கள். நைஜீரிய நாட்டின் பேயெல்சோ மாநிலத்தை சேர்ந்த இளைஞன் டேவிட் என்பவர் டேவிட் அவரது நிச்சயதார்த்த விழாவுக்கு நைஜீரிய நாட்டின் மற்றொரு மாநிலமான ஐமோ மாநிலத்துக்கு சென்றான். உணவு மற்றும் பாட்டு கோஸ்ட்டி செலவு உட்பட திருமண செலவாக மாப்பிள்ளையிடம் 45 லட்சம் ரூபா வாங்கப்பட்டு இருந்தது கொடுக்கவேண்டிய சீதனமாக 3 லட்சம் நிச்சயிக்கபட்டு இருந்தது. கல்யாணத்துக்கு […]

முக்கிய செய்திகள்

சிறீதரன் எம்.பி. ஸ்டாலினுடன் கதைத்து வடக்கு மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் – யாழ். மீனவர் அமைப்பு

  • January 16, 2025
  • 0 Comments

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். இன்றையதினம் சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது […]