உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

  • January 14, 2025
  • 0 Comments

அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

  • January 12, 2025
  • 0 Comments

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கண்டி – தவுலகல மாணவி கடத்தலுக்கான காரணம் வெளியானது!

  • January 12, 2025
  • 0 Comments

கண்டி – தவுலகல பகுதியில் வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்!

  • January 11, 2025
  • 0 Comments

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்,மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து 2025ம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் பண்டிகை நடைபெறவுள்ளது. அதன்படி புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் தலைமையில் காலை 7.30 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ […]

உள்ளூர்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி நுவரெலியாவில் வெடித்த போராட்டம்!

  • January 10, 2025
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை […]

இந்தியா முக்கிய செய்திகள்

பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!

  • January 10, 2025
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று(09) காலமானார். தமது 80வது வயதில் அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன். தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், காத்திருந்து காத்திருந்து, […]

முக்கிய செய்திகள்

இலங்கையில் இனப்பெருக்கம் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

  • January 9, 2025
  • 0 Comments

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், இந்த நாட்டில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் 350,000 இருந்த பிறப்புகள், 2024 ஆம் ஆண்டில் 228,000 ஆகக் குறைந்துள்ளது. அந்தக் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட […]

முக்கிய செய்திகள்

யாழில் விபத்து மோட்டார் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

  • January 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. […]

உள்ளூர்

யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய கும்பல்.!!!

  • January 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவர் கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழுவொன்று அவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், ‘உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன். […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)01.01.2025

  • January 2, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக எழுந்த மக்கள் புலம்பெயர் உறவுகள் எம் நாட்டைக்கட்டி எழுப்புவர்- செல்வம் எம்பி மக்களுக்கு சொன்னதை செய்யுங்கள் அநுரவுக்கு,நாமல் தெரிவிப்பு வடக்கின் வர்த்தகர்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தியுள்ளனர் https://youtu.be/vTUZ1ADaoy0