கனடா

பிரம்டனில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் கைது!

  • December 25, 2024
  • 0 Comments

பிரம்டன் பகுதியில் மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு எவ்வித ஆபத்தும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இதையும் படியுங்கள்>கனடாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம்! https://www.youtube.com/@pathivunews

இந்தியா

குவைத்தில் இந்திய வம்சாவளி ஊழியர்களை சந்தித்த பிரதமர் மோடி!

  • December 24, 2024
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மருத்துவ விடுமறை […]

உலகம்

பட்டினித் துயரில் நைஜீரியா 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

  • December 23, 2024
  • 0 Comments

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் […]

உள்ளூர்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

  • December 23, 2024
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

  • December 16, 2024
  • 0 Comments

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம் யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி! மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே  இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் https://youtu.be/2svXrqbsfvc

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • December 6, 2024
  • 0 Comments

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு https://fb.watch/wiUTYwy9YW/

இந்தியா

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • December 2, 2024
  • 0 Comments

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் […]

இந்தியா

விழுப்புரத்தில் 42 ஆண்டுகளுக்கு பின் அடித்து கொட்டிய கன மழை

  • December 1, 2024
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்ததால் அங்குள்ள தென் ஏரி உடைந்ததையடுத்து அதனையண்டிய அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

உலகம்

உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது- ஐ.நா அறிக்கை.

  • November 26, 2024
  • 0 Comments

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான […]

உலகம்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • November 9, 2024
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]