இந்தியா முக்கிய செய்திகள்

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஸ்குமார் இன்று பதவியேற்கிறார்

  • February 19, 2025
  • 0 Comments

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெற்றார். இதையடத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் (நுஊ) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார். இந்நிலையில், நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று (பிப்ரவரி 19) பதவியேற்கிறார். இன்று தலைமை தேர்தல் […]

உலகம் முக்கிய செய்திகள்

6 பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறித்துள்ளது

  • February 19, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர். ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் செப்பனிடப்படவேண்டிய வீதிகள் விபரம் இனிதான் சேகரிக்க வேண்டும்- அரச அதிபர் பிரதீபன்

  • February 18, 2025
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் உள்ள வீதிகளின் முழுமையான விபரங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கையளிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்தியபோது யாழ். மாவட்டத்துக்கு வீதிகளை புனரமைக்க எவ்வளவு நிதி தேவை, எத்தனை கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கேள்விகளை கேட்டபோது அதற்கு முறையான பதில்களை அரசாங்க அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. மேலும், […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் தாயுடன் உறங்கிய குழந்தை மர்மமாக இறந்துள்ளது. சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

  • February 18, 2025
  • 0 Comments

வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. பிறந்து ஒன்றரை மாதமேயான இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்ப்பால் அருந்திவிட்டு தாயுடனே உறங்கியுள்ளது. மறுநாள் திங்கட்கிழமை அதாவது நேற்று (17-02-2025) அதிகாலை குழந்தைக்கு பால் புகட்டுவதற்காக தாய் குழந்தையை எழுப்பியபோது குழந்தை சுவாசமின்றி இருந்துள்ளது. அதனையடுத்து, உடனடியாக குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை முன்னரே இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு […]

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

  • February 17, 2025
  • 0 Comments

இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். […]

முக்கிய செய்திகள்

நுகர்வோரையும் பாதுகாக்கவே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை நிர்ணயித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்

  • February 16, 2025
  • 0 Comments

அரசாங்கம் உத்தரவாத விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலை பிரதேசத்தில் நேற்று (15-02-2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலின் பின்னர் நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பம் […]

முக்கிய செய்திகள்

மக்களின் அரசாங்கத்தை மக்களே பாதுகாப்பார்கள் எனவே அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென பிரதமர் தெரிவித்துள்ளார்

  • February 16, 2025
  • 0 Comments

எமது அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அவ்வாறு எவராவது நினைப்பார்களாயின் அது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? எமது அரசியல் கொள்கை பிரகடனம் மற்றும் எமது அரசியல் கலாசாரத்துடன் […]

முக்கிய செய்திகள்

அரச சேவையினை பெற வரும் மக்களை அலைக்கழிக்க வேண்டாமென வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்

  • February 15, 2025
  • 0 Comments

அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தால் உடனடியாக அவர்களை அன்பாக அணுகி சேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால் மேலதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பொதுமகனின் தேவையை எப்படி நிறைவு செய்து கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள். ‘பந்தடிப்பது’ போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத் தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் […]

உலகம் புதியவை வணிகம் வினோத உலகம்

24 கோடி (எல்கேஆர்) சம்பளத்துடன் பதவி உயர்வு பெற்ற ஐடி ஊழியரின் மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்

  • February 15, 2025
  • 0 Comments

ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழில்நுட்ப ஊழியர், பதவி உயர்வுக்காக தனது திருமணம் எவ்வாறு முறிந்தது என்பது குறித்து பேசியுள்ளார். சமூக ஊடகமான டீடiனெ தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கூட உழைத்து கடைசியாக சமீபத்தில் 24 கோடி கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக […]

இந்தியா முக்கிய செய்திகள்

நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் அண்ணாமலை விளக்கம்

  • February 15, 2025
  • 0 Comments

விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘லு’ பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த  Y பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக […]