இந்தியா சினிமா முக்கிய செய்திகள்

பாடலாசிரியர் சினேகனின் இரட்டை குழந்தைகளின் பெயர் ஒரு குழந்தை காதல் மற்றைய குழந்தை கவிதை

  • February 15, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்து, […]

உலகம் முக்கிய செய்திகள்

சுனிதா வில்லியம்சை மீட்க டிரம்ப நடவடிக்கை.

  • February 13, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, […]

உலகம் முக்கிய செய்திகள்

ரஸ்சிய ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் போனில் பேச்சுவார்த்தை, உக்ரைன் போர் முடிவுக்கு வருகின்றதா?

  • February 13, 2025
  • 0 Comments

ரஸ்சியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், ரஸ்சிய ஜனாதிபதி புதினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஸ்சிய சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: ரஸ்சிய ஜனாதிபதி ; புதினுடன் சற்று முன் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் அரசியலும் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அடைந்தள்ளதாக குவைத்திற்கு ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்

  • February 12, 2025
  • 0 Comments

2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஸேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (11-02-2025) பிற்பகல் இடம்பெற்றது. தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கான சாத்தியங்கள் விரிவடைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் […]

இந்தியா

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்- மம்தா

  • February 11, 2025
  • 0 Comments

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. […]

இந்தியா

தமிழக மீனவர்கள் 14 பேர் கைதுசெய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

  • February 9, 2025
  • 0 Comments

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் தமிழகத்தை சேர்ந்த 2 […]

இந்தியா முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் படுதோல்வி

  • February 9, 2025
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. அதன்படி டெல்லியில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் (யுயுP) […]

இந்தியா முக்கிய செய்திகள்

இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி

  • February 8, 2025
  • 0 Comments

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக […]

இந்தியா

தமிழ்நாடு திருச்சி பாலியல் வழக்கில் முதலாவது சந்தேன நபருக்கு குற்றவாளிக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  • February 8, 2025
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார்

  • February 7, 2025
  • 0 Comments

வவுனியா புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு […]