உலகம் முக்கிய செய்திகள்

டீப்சீக் ஏஐ-க்கு இந்தியா மற்றும் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது

  • February 7, 2025
  • 0 Comments

உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது. ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் அடைகின்றன. குறிப்பாக டீப்சீக் ஏஐ குறித்து அச்சம் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்க பாராளுமன்ற ஊழியர்கள் […]

முக்கிய செய்திகள்

நெல் கொள்வனவிலிருந்து வவுனியா விவசாயிகள் தவிர்பு என விவசாயிகள் கவலை

  • February 6, 2025
  • 0 Comments

வவுனியா நெற் சந்தைப்படுத்தல் சபையினால் இன்று நெற்கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் வவுனியா மாவட்டத்தில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடம் இருந்து இன்று நெல்லினை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் நெல் கொள்வனவிற்கான நிதி தமக்கு கிடைக்காமையினாலேயே நெற்கொள்வனவினை முன்னெடுக்கவில்லை என்றும், திங்கட்கிழமைக்கு பின்னரே நெற் கொள்வனவினை மேற்கொள்ள முடியும் என நெல் சந்தைப்படுத்தும் சபையினர் […]

உலகம்

நைஜீரிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

  • February 6, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது. இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து தீயணைப்புப் […]

முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில் நிதி திருப்பி அனுப்படவில்லை- ஈபிடிபி இன் ஊடக செயலர் சிறீகாந்

  • February 5, 2025
  • 0 Comments

அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைப்பதாகவும், இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் – ஜனாதிபதி அனுர தலைமையில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எந்தவிமான […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிக்கு வேலை கிடைக்கவில்லை தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

  • February 5, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் நேற்று (4-02-2025 ) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […]

உலகம்

சிரியாவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி

  • February 4, 2025
  • 0 Comments

சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் சிரிய சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி பொய்யுரைப்பதால் இந்தியாவுக்கு வெளிநாட்டில் மரியாதை குறையும்- ஜெய்சங்கர்

  • February 4, 2025
  • 0 Comments

பாராளுமன்ற வரவு செலவு திட்ட கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் நேற்று (03-02-2025) கூடியது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார் அப்போது அவர், ‘இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், […]

முக்கிய செய்திகள்

மாவையின் கனவை நனவாக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள்

  • February 3, 2025
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகிள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள். அவர்கள் அஞ்சலி உரையாற்றும் போது தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, இறுதி அஞ்சலி நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில், மாவை அவருடைய வாழ்க்கையின் நீண்ட நெடிய […]

முக்கிய செய்திகள்

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் தீய பொருட்கள் இல்லையென எவ்வாறு அரசு சொல்ல முடியுமென எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்

  • January 31, 2025
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்nருந்த 80 சதவீத கொள்கலன்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார் அத்துடன் இது நாட்டின் வரி வருமானத்தில் பாரிய இழப்பை ஏற்பட்டுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக எழுந்துள்ள துறைமுக கொள்கலன் நெரிசல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (31) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் […]

முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மகிந்தவை பாதுகாக்க வேண்டும்- எஸ்.பி.திசாநாயக்க

  • January 31, 2025
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டாலும் அதன் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. காலி முகத்திடல் அரகலய பூமியில் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (30-01-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வெகுவிரைவில் தீர்வு […]