உள்ளூர்

இலங்கை கடற்படையால் முடியாதெனில் தமிழ் மீனவர்களே இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவர்- ரவிகரன் எம்.பி

  • July 15, 2025
  • 0 Comments

வடக்குக் கடற்பரப்பில் அதிகரித்து வரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையால் முடியவில்லையெனில், அந்தப் பொறுப்பை ஒரு மாதத்திற்கு மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு; வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார மன்னார் முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி வருகின்றன என்றும், இது தொடர்பாக கடற்படையும் அரசாங்கமும் காரணங்களையே கூறிக்கொண்டிருப்பதாகவும் […]

முக்கிய செய்திகள்

இத்தாலி, 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது

  • July 14, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ள 2026 டி20 உலகக் கிண்ண தொடருக்காக, இத்தாலி அணியின் தகுதி பெற்ற சாதனை ஒரு வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளது. இதுவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐஊஊ) போட்டிக்காக இத்தாலி தகுதி பெற்றது முதல் முறையாகும். இத்தாலி அணி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) ஹேக்கில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்திடம் 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த போதிலும், தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருந்து 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தெற்காசியாவில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கையுள்ளது- ரஸசிய வெளிவிவகார அமைச்சர்

  • July 11, 2025
  • 0 Comments

தெற்காசியப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோ உறுதியளித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் (ஆசியான்) அமைச்சர் மட்ட நிகழ்வுகளின் ஓரங்கமாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10-07) நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இலங்கை – ரஷ்ய நல்லுறவில் அழுத்தங்களைத் தோற்றுவித்திருக்கும் […]

உள்ளூர்

யாழ் அச்சுவேலியில் கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சித்த 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

  • June 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மாலை (26-06) இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10) அரசடி, தோப்பு என்ற முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். தனது பேரனுடன் தோட்டத்துக்கு சென்ற சிறுவன், பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் […]

உலகம் முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் பலி, 400 பேர் காயமென காசா தெரிவித்துள்ளது.

  • June 26, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் காசா மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்து, சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பல மரணங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பலியானவர்களின் பிணங்களை குடும்பத்தினர் எடுத்து செல்லும் போது ஏற்பட்ட அவலக் காட்சிகள் உலகை உலுக்கியன. இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெற்ற போர் நடவடிக்கையில் இதுவரை 56,156 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • June 25, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதலின் இலக்கு என்ன? ஆட்சியை கவிழ்ப்பதா அணுசக்தியை அழிப்பதா?

  • June 14, 2025
  • 0 Comments

இரானின் அணுசக்தி மூலம் இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனை அழிப்பதே வெள்ளிக்கிழமை தான் நடத்திய தாக்குதல்களின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அந்த பெரிய இலக்கு. இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஒரு சங்கிலித் தொடர் போன்ற எதிர்வினையை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் ஏற்படும் அமைதியின்மை இறுதியில் […]

உள்ளூர்

தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்ததா என பரிசீலிக்கப்படும் – டக்ளஸ்

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் […]

உள்ளூர்

இந்திய – இலங்கை அரசின் நிதியில் மன்னாரில் நிறுவிய வீடுகள் ; பயனாளிகளிடம் கையளிப்பு

  • May 27, 2025
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் கடந்த திங்கட்கிழமை (26-05) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி […]

உலகம்

உக்ரைனின் விமானத் தாக்குதலில் இருந்து ரஷிய ஜனாதிபதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

  • May 26, 2025
  • 0 Comments

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். புதினின் ஹெலிகாப்டர் பாதையில் […]