உள்ளூர்

உள்ளூராட்சியில் கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சிகளுக்கு ஆதரவென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

  • May 26, 2025
  • 0 Comments

தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்கும் என தமிழ்தேசிய பேரவையின் தலைவரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம தெரிவித்துள்ளார். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தொடரும் சிக்கல்

  • May 26, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், தமது கூட்டணி முன்னிலை பெற்றுள்ள சபைகளில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது. அதேநேரம், எந்தவொரு தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. […]

உள்ளூர்

வட, கிழக்கிலுள்ள மக்களின் நிலங்களை கையகப்படுத்தும திட்டம் அரசிடம் இல்லையென்கிறார் பிரதமர்

  • May 24, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23-05) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். இதுவரை […]

உள்ளூர்

யாழில் 30 வயது யுவதி திடீரென மரணம். அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • May 23, 2025
  • 0 Comments

நேற்று முன்தினமிரவு (21-05 இரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி புதன்கிழமை (21-05) இரவு சாப்பிட்டுவிட்டு இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார். பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீரியல்கள் போல அண்ணனும் தம்பியும் மாறி மாறி தமக்கிடையே வெட்டி விளையாடுகின்றனர்

  • May 21, 2025
  • 0 Comments

பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை (20-05) இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில், காயமடைந்த இளைய சககோதரரின் உயிர், அறுவை சிகிச்சை நிபுணரின் திறமையால் காப்பாற்றப்பட்டதாக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் முகநூலில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,”இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த […]

உள்ளூர்

வவுனியா சிறையில் சிறை காலர்கள் யாழ்ப்பாண கைதி மீது கொலைவெறி தாக்குதல்

  • May 20, 2025
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என தெரியவருகிறது. படுகாயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையின்; அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 15-05-2025 தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறைக்கைதியின் உறவினர்களால் நேற்று (19-05) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக […]

உள்ளூர்

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு அரச தரப்பில் ஆதரவு வழங்குவதாக சரத் வீரசேகர குற்றச்சாட்டு

  • May 20, 2025
  • 0 Comments

”யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச் சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கருத்துகளை முன்வைத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகிறார். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றம் இடம்பெறவில்லையென்பதை நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பிமலின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அவரின் கருத்துகள் அமைந்துள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று (19-05) இடம்பெற்ற செய்தியாளர் […]

உள்ளூர்

மஹிந்த, குடும்பம் மரணித்த படையினருக்கு அஞ்சலி செலுத்தினர்

  • May 20, 2025
  • 0 Comments

முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘இன்று நாங்கள் […]

உள்ளூர்

கர்ப்பமான மனைவியையும் வயிற்றிலுள்ள சிசுவையும் தூக்கில் தொங்கவிட்ட கொன்ற கணவன்- மாத்தறையில் சம்பவம்

  • May 19, 2025
  • 0 Comments

மாத்தறை தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 06.45 மணியளவில் மணைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார். உடனே ஊராருக்கு சந்தேகம் ஏற்படவே கணவன் மாயமாக சென்று பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார். ஊரார் உடனே 1990 அம்பியுலன்ஷ் மற்றும் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். குறித்தப்பெண் இறந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் இந்த பெண் 9 மாதங்கள் […]

உலகம்

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.

  • May 19, 2025
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில், காசா போர்நிறுத்த […]