உள்ளூர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார்

  • March 29, 2025
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஶ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடங்கி வைப்பார். இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

அனுராதபுரம் பெண் வைத்தியரை வல்லுறவுக்கொண்ட சந்தேகநபரை வைத்தியர் இன்று அடையாளம் காட்டினார்

  • March 28, 2025
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த 10 திகதி (10-03) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்காக, பாலியல் […]

உள்ளூர்

யாழப்பாணத்தில் 5ம் ஆண்டு மாணவியை தடியால் சின்னதாய் ஒரு தட்டு தட்டிய ஆசிரியர் கைது

  • March 28, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை […]

இந்தியா வினோத உலகம்

மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

  • March 27, 2025
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வாசலில் மணியும் மானும்

  • March 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது. வேட்பு மனுவில் தேவையான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரித்தானியா தடை விதிப்பானது தமிழ் இளையோரின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறது சர்வதேச மையம்

  • March 25, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் படைத்தளபதிள் மீதான பிரித்தானியாவின் தடை விதிப்பு தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா தடை விதித்துத்துள்ளமை தொடர்பில் அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது, 2020 இல் நடைமுறைக்கு வந்த […]

இந்தியா

த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

  • March 25, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து […]

உலகம்

தென்கொரியாவில் காட்டுத்தீ 17 ஆயிரம் ஏக்கர் எரிந்து – அவசர நிலை அறிவிப்பு

  • March 25, 2025
  • 0 Comments

தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசர நிலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண் தலைமறைவு பொலிஸார் வலை வீச்சு

  • March 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்ற சமயம், கடையில் இனிப்பு பொருட்களை திருடினார் என கடை உரிமையாளரான பெண், சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து, தாக்கி சித்திரவதை செய்துள்ளார். பின்னர், சிறுமி காயங்களுடன் வீட்டுக்குச் சென்ற நிலையில், […]

உள்ளூர்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்தில் பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்!

  • March 20, 2025
  • 0 Comments

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக’ போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் அதன்படி வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் இதேபோன்று […]