தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் கீழ் பட்டியலிட்டது இந்தியா
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் 67 அமைப்புகள் கொண்ட திருத்தியமைக்கப்பட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கால்சா இன்டர்நேஷனல், […]



