6 பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறித்துள்ளது
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர். ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், […]