உள்ளூர்

வவுனியாவில் இளம் மனைவி கொலை கணவன் மாயம்.நடந்தது என்ன?

  • November 4, 2025
  • 0 Comments

வவுனியா பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மறைந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு வயது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மாலை பணி முடித்து வீடு திரும்பிய தாயார், தனது மகள் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இ.சிந்துஜா […]

உள்ளூர்

யாழ் சுன்னாகத்தில் ஆட்டோவையும் எரித்து வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர்.

  • November 4, 2025
  • 0 Comments

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு (03-11) இரவு வன்முறைக் குழுவொன்று அட்டகாசம் செய்ததில், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தகவல்கள் தெரிவிப்பதாவது, குறித்த குழுவினர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துள்ளனர். இதனால் வண்டி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டதுடன், உள்ளே இருந்த பொருட்களும் உடைத்து நொறுக்கப்பட்டன. எனினும், விழிப்புணர்வுடன் செயல்பட்ட வீட்டார் உடனடியாக தீயை அணைத்ததன் மூலம் மேலும் பெரும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சஜித்தும் ரணிலும் இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக தயார்- எஸ்.எம். மரிக்கார்

  • November 1, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட ஒத்துழைந்தால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் எனத் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதுபோல் கூறினார். ‘மிகவும் தீர்மானமாக, மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கான முடிவை இன்னும் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரே மேடையில், ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிடும்படி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாரின் இடையூறுகளுக்கிடையிலும் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின்; போராட்டம் நாளையும் தொடரும்.

  • September 18, 2025
  • 0 Comments

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ‘விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு’, ‘இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிராக போராடுவோம்’ எனும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, நாளை (19-09) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதே இடத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் […]

உலகம்

இஸ்ரேலின் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் – கத்தார் பிரதமர் வலியுறுத்தல்

  • September 15, 2025
  • 0 Comments

இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாடு காட்டுவதை நிறுத்தி, அதன் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துர் ரஹ்மான் அல் தானி வலியுறுத்தினார். செப்டம்பர் 14 ஆம் திகதி, டோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட முன்னெப்போதும் இல்லாத வான்வழித் தாக்குதலை அடுத்து, கத்தார் ஏற்பாடு செய்த அவசர அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் முன்னோடி கூட்டத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்

  • September 14, 2025
  • 0 Comments

கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னர், மொத்தம் 17 சந்தேகநபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சட்டநடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் கூறினார். புதிய அரசு பதவியேற்றதையடுத்து அனைத்து ரெட் நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டதாகவும் வூட்லர் உறுதிப்படுத்தினார். சர்வதேச சட்ட அமலாக்கத்தின் சிக்கல்களை விளக்கிக் கூறிய அவர், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் மக்கள் சுமையை ஏற்கிறார்கள்- CEB

  • September 14, 2025
  • 0 Comments

எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கை மின்சார சபை போட்டி முறையிலான எரிபொருள் கொள்முதல் செயல்முறையை அறிமுகப்படுத்த முயன்றபோது, அதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, அரச நிதியை பாதுகாக்கவும், தேசிய ஆற்றல் கொள்கை மற்றும் நிர்வாக தரநிலைகளுடன் இணங்கவும், உடனடியாக போட்டி அடிப்படையிலான எரிபொருள் கொள்முதல் முறையை ஆரம்பிக்க வேண்டும் என […]

உள்ளூர்

நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டது இடைகால பெண் பிரதமர் பதவியேற்பு

  • September 13, 2025
  • 0 Comments

நேபாள அரசியல் பெரும் பரபரப்புக்கிடையில் அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று (12-09) இரவு கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதோடு, அடுத்த ஆண்டு மார்ச் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் அறிவித்தார். இளைய தலைமுறையினரின் போராட்டங்களும் வன்முறையும் தீவிரமடைந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆட்சி எதிர்ப்பை சந்தித்த பிரதமர் சர்மா ஒலி, செப்டம்பர் 9ஆம் திகதி பதவி விலகினார். தொடர்ந்து நாட்டின் சட்டம் மற்றும் […]

உள்ளூர்

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

  • September 1, 2025
  • 0 Comments

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. அதன்படி, 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகவும்,325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 313 ரூபாவாகவும், 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் […]

உள்ளூர்

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டிலிருந்து உணவு அனுமதி

  • September 1, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் ரஜித சேனரத்னையும் நிமல் லன்சாவையும், அவர்கள் வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை பெற்றுக்கொள்ள சிறைச்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிறைச்சாலைத்துறை பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்ததாவது, இருவரும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டதாகும். ரஜித சேனரத்ன அரசு நிதிக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் வருகிற செப்டம்பர் 9 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் […]