இந்தியா முக்கிய செய்திகள்

காதலியையும் காதலியின் தந்தையையும் சுட்டுக்கொன்ற இளைஞன் தற்கொலை

  • March 27, 2025
  • 0 Comments

பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா தொடரூந்து ; நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் தொடரூந்து நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார். பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு […]

இந்தியா

சென்னையில் தொடர் செயின் பறித்து வந்த கொள்ளையனை போட்டு தள்ளியது பொலிஸ்

  • March 26, 2025
  • 0 Comments

திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சென்னையில் ஒரே நாளில் நடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண் தலைமறைவு பொலிஸார் வலை வீச்சு

  • March 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்ற சமயம், கடையில் இனிப்பு பொருட்களை திருடினார் என கடை உரிமையாளரான பெண், சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து, தாக்கி சித்திரவதை செய்துள்ளார். பின்னர், சிறுமி காயங்களுடன் வீட்டுக்குச் சென்ற நிலையில், […]

உலகம்

சுனிதா வில்லியம்சுக்கு எனது சொந்த பணத்தில் இருந்து சம்பளம் வழங்குவேன்- டிரம்ப்

  • March 23, 2025
  • 0 Comments

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர். அதாவது, திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா […]

இந்தியா உலகம்

தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

  • March 23, 2025
  • 0 Comments

  சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தலைமன்னாருக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குமான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுமா?

  • March 22, 2025
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். கடந்த […]

உள்ளூர்

கிளிநொச்சி பரந்தன் வீடொன்றில் கெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு மூவர் கைது

  • March 22, 2025
  • 0 Comments

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5கிறாம் 75மில்லிக்கிறாம் கெறோயின் என்பன கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர். கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ள

இந்தியா

விடுதலை சிறுத்தைகளின் பெனரை கிழித்ததால் வீதியின் குறுக்கே காரை நிறுத்தி வி.சி.க.வினர் வீதி மறியல்

  • March 22, 2025
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

  • March 22, 2025
  • 0 Comments

யாழ். சேந்தாங்குளம் கடலில் நேற்று (21-03) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த 20 வயதுடைய பி.சாருஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக நேற்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் சாருஜன் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் […]

உள்ளூர்

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு 114 பெரும்பான்மை வாக்குகளால்  நிறைவேறியது

  • March 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.