உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பில் 68 வயது தாயை கொன்ற கொன்ன மகன். காரணம் என்ன?

  • March 20, 2025
  • 0 Comments

  போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்காத தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, சந்தேக நபரான மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் போது சந்தேக நபரான மகன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் மீதான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த புதின் ஒப்புதல்

  • March 19, 2025
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. […]

உலகம் புதியவை வினோத உலகம்

சுனிதா வில்லியம்ஸ் 195 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்து பூமி திரும்பினார்

  • March 19, 2025
  • 0 Comments

விண்வெளியில் ஒன்பது மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமெரிக்க வளைகுடாவில் தரையிறங்கியதை அடுத்து, விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ், நாசா மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்டனர், இது அவர்களின் உண்மையான திட்டத்தை விட 278 நாட்கள் அதிகம் ஆகும். அவர்களின் பயணம் முழுவதும், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு சட்டவிரோதமானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  • March 19, 2025
  • 0 Comments

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்காக அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் […]

உலகம் வினோத உலகம்

சுனிதா வில்லியம்ஸ் நாளை மறுதினம் (இலங்கை நேரப்படி) பூமிக்கு திரும்புகின்றர்

  • March 17, 2025
  • 0 Comments

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் புதிய தேதியை அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது. நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் […]

உலகம்

அமெரிக்க மற்றும் ரஸ்சிய ஜனாதிபதிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

  • March 17, 2025
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் உடல்நிலை தேறியுள்ளது. ஒளிப்படம் வெளியிட்ட வாடிகன்

  • March 17, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் […]

இந்தியா வினோத உலகம்

18 வயது மகனின் இழப்பை தாங்கமுடியாத40 வயது தாய் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

  • March 17, 2025
  • 0 Comments

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (16-03)அவர் உயிரிழந்தார். யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து மூவர் காயம்

  • March 17, 2025
  • 0 Comments

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று (16-03) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பளை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

உலகம் புதியவை வினோத உலகம்

சுனிதா வில்லியம்ஸ் மீட்க சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

  • March 16, 2025
  • 0 Comments

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சென்றனர். அவர்கள் 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. […]