இந்தியா சினிமா முக்கிய செய்திகள்

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி

  • February 27, 2025
  • 0 Comments

80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்று மருத்துவவமனை வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகனின் மர்மமறியாது மரணித்த மற்றொரு அம்மா

  • February 26, 2025
  • 0 Comments

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தமிழ்த் தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைக் கண்டுபிடிக்க சுமார் 3,000 நாட்கள் போராட்ட களத்தை ஆக்கிரமித்த ‘மாரியம்மா’ என அழைக்கப்படும் வேலுசாமி மாரி, தனது 79ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24-02-2025) காலமானார். வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், கடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் படையினரின் உயர் மட்டத்தினருக்குமிடையில் அவசர சந்திப்பு

  • February 25, 2025
  • 0 Comments

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காலி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்.

  • February 25, 2025
  • 0 Comments

காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள […]

உலகம்

மட்டக்களப்பு மாணவியை தொடர்ந்து பரிஸ் நகரிலும் பெற்ற குழந்தையை தொப்புள் கொடியுடன் வீசியெறிந்த மாணவி

  • February 25, 2025
  • 0 Comments

மாடியில் உள்ள ஒரு அறையில் பிரசவித்து, பின்னர் தனது குழந்தையை துணி சுற்றி கீழே வீசினார். ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவர் குழுவில் அப்பெண் இடம்பெற்றிருந்தார். 18 வயது அமெரிக்கப் பெண் ஒருவர், தனது பிறந்த குழந்தையை ஹோட்டல் ஜன்னலுக்கு வெளியே ‘தொப்புள் கொடியுடன்’ தூக்கி எறிந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கிழக்கு பாரிஸில் உள்ள போர்ட் டி மாண்ட்ரூயிலில் அமைந்துள்ள ஐபிஸ் ஸ்டைல்ஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 18 வயது மாணவியான அப்பெண் […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் ஆண்டகைக்காக மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

  • February 25, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை மெல்ல தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி ஆயிரக்கணக்கானோர் பிராரத்தனை செய்த சம்பவம் வாடிகனில் அரங்கேறியது. அதன்படி வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் அருகே ஒன்று கூடிய மக்கள் […]

உலகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் சிறுநீரக பாதிப்பால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

  • February 24, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் […]

இந்தியா

இலங்கை கடற்படைக்கெதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்

  • February 24, 2025
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக […]

இந்தியா

மும்மொழி கொள்கையை ஏற்றாலே மத்திய அரசு நிதி தரும்- மத்திய கல்வியமைச்சர்

  • February 23, 2025
  • 0 Comments

மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர […]

உலகம்

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை கவலைக்கிடம் என வத்திகான் அறிவிப்பு

  • February 23, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசரின் பிரான்சிஸ் ஆண்டகையின் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]