முக்கிய செய்திகள்

நுகர்வோரையும் பாதுகாக்கவே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை நிர்ணயித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்

  • February 16, 2025
  • 0 Comments

அரசாங்கம் உத்தரவாத விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலை பிரதேசத்தில் நேற்று (15-02-2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலின் பின்னர் நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பம் […]

இந்தியா முக்கிய செய்திகள்

சீறியெழும் சீமான் விஜய்க்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு

  • February 16, 2025
  • 0 Comments

குறிப்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா? கைக்கூலி, ஓட்டுப்பிச்சை என்று கூறுவதா?, ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள். அனைவரும் […]

முக்கிய செய்திகள்

மக்களின் அரசாங்கத்தை மக்களே பாதுகாப்பார்கள் எனவே அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென பிரதமர் தெரிவித்துள்ளார்

  • February 16, 2025
  • 0 Comments

எமது அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அவ்வாறு எவராவது நினைப்பார்களாயின் அது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? எமது அரசியல் கொள்கை பிரகடனம் மற்றும் எமது அரசியல் கலாசாரத்துடன் […]

இந்தியா உலகம் வினோத உலகம்

‘உலகின் மிக விலை உயர்ந்த தங்கச்சட்டை அணிந்து கின்னஸ் சாதணை படைத்தவர் அடித்து கொலை

  • February 15, 2025
  • 0 Comments

உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிபவர்’ என கின்னஸ் புத்தகம் புனேவின் தத்தா புகே என்பவரை அறிவித்தது. ப்ரூனே சுல்தான், அம்பானி, டாட்டா, பிர்லா என பலர் இருக்க இது யார் தத்தா புகே? அது என்ன உலகின் விலை உயர்ந்த சட்டை என அனைவரும் குழம்பினார்கள். தத்தா புகே புனேவில் சீட்டு கம்பனி நடத்திவந்தவர். தங்க நகைகள் மேல் ஆர்வம் அதிகம். நடமாடும் நகைக்கடை மாதிரி உடல்முழுக்க நகைகளை அணிந்து பவனிவந்தார். ஒரு நாள் […]

உலகம் புதியவை வணிகம் வினோத உலகம்

24 கோடி (எல்கேஆர்) சம்பளத்துடன் பதவி உயர்வு பெற்ற ஐடி ஊழியரின் மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்

  • February 15, 2025
  • 0 Comments

ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழில்நுட்ப ஊழியர், பதவி உயர்வுக்காக தனது திருமணம் எவ்வாறு முறிந்தது என்பது குறித்து பேசியுள்ளார். சமூக ஊடகமான டீடiனெ தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கூட உழைத்து கடைசியாக சமீபத்தில் 24 கோடி கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக […]

இந்தியா முக்கிய செய்திகள்

நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் அண்ணாமலை விளக்கம்

  • February 15, 2025
  • 0 Comments

விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘லு’ பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த  Y பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக […]

இந்தியா சினிமா முக்கிய செய்திகள்

பாடலாசிரியர் சினேகனின் இரட்டை குழந்தைகளின் பெயர் ஒரு குழந்தை காதல் மற்றைய குழந்தை கவிதை

  • February 15, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்து, […]

முக்கிய செய்திகள்

அதானிகுழுமத்துடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகின்றதா?

  • February 14, 2025
  • 0 Comments

காற்றாலை மின்திட்டம் குறித்து இந்தியாவின் அதானிகுழுமமும் இலங்கை அரசாங்கமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக அதானி குழுமம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கமும் அதானிகுழுமமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன இதன் மூலம் காற்றாலை மின் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றாக பூர்த்தியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இருதரப்பும் அடுத்தவாரம் மூடியகதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா என […]

உலகம் முக்கிய செய்திகள்

ரஸ்சிய ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் போனில் பேச்சுவார்த்தை, உக்ரைன் போர் முடிவுக்கு வருகின்றதா?

  • February 13, 2025
  • 0 Comments

ரஸ்சியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், ரஸ்சிய ஜனாதிபதி புதினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஸ்சிய சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: ரஸ்சிய ஜனாதிபதி ; புதினுடன் சற்று முன் […]

இந்தியா உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதியை சந்திப்பதற்கு இந்திய பிரதமர் அமெரிக்கா சென்றடைந்தார்

  • February 13, 2025
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். பிரான்சின் மெர்சிலி நகரில் […]