ஆழமான கழிவு வடிகாலில் விழுந்த 2 வயது குழந்தை சடலமாக மீட்பு
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் வைரவ் கிராமத்தில் உள்ள ஒரு பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்ததாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் சுமார் 60 முதல் 70 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கனரக வாகனம் ஒன்று ஏறி இறங்கியதால் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்தது. இதனால் இந்த சம்பவம் நிகழ்ந்தது […]