உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்றைய எரிபொருள் விலை மாற்றத்தின் பின் விலை நிலைத்திருக்கும் – சிபிசி

  • August 31, 2025
  • 0 Comments

  இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று (31-08) நள்ளிரவில் அறிவிக்கப்படவுள்ள மாதாந்திர திருத்தத்திற்குப் பிறகும் மாறாமல் நீடிக்கும் என சிலோன்   பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)  இயக்குநர் டாக்டர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு மொத்தத்தில் சுமார் 10 சதவீத குறைப்பு ஏற்பட்டுள்ளதைத் தவிர, எரிபொருள் விலைகளில் பெரிய மாற்றமில்லை. ‘அது குறிப்பிடத்தக்க குறைப்பா என்பதைக் குறித்து நான் முடிவு செய்ய முடியாது,’ எனவும் குறிப்பிட்டார். இலங்கை தற்போது உலக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

  • August 29, 2025
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகயாவுடன் இணைந்துள்ள ளுடுவுடீ ‘சமகி தலைவரான நிரோஷன் சம்பத் பிரேமரத்னே, அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் (Nவுஊ) தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக, அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அவர்களின் எதிர்ப்புக்குரிய முக்கிய காரணமாகும். இதுகுறித்து தனியார் பேருந்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் சம்மாந்துறையில் நடைப்பெற்றது

  • August 24, 2025
  • 0 Comments

(நூருல் ஹுதா உமர்) பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் நேற்று (23-08) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் இடம்பெற்றது. 1996ஆம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக பணியாற்றத் தொடங்கிய எஸ்.எல். றியாஸ், தனது எழுத்து பணி மூலம் ஊடக உலகில் பிரகாசித்தார். அதே ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி […]

உள்ளூர்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • August 24, 2025
  • 0 Comments

கொழும்பு புறநகர் பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மாலனி புளத்சிங்கள வீதியில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் கல்கிஸ்ஸையைச் சேர்ந்த கிஹான் துலான் பெரேரா (25) என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாக பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை […]

உள்ளூர்

கொழும்பில் இன்றும் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

  • August 21, 2025
  • 0 Comments

இந்தச் சம்பவம் பண்டாரகம துன்போதிய பாலத்திற்கு அருகில் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் இடம்பெற்றது. அடையாளம் தெரியாத ஒருவர் காரில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. டி-56 வகை துப்பாக்கி பயன்படுத்தி, குறித்த நபர் மீது 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர

இந்தியா முக்கிய செய்திகள்

த.வெ.க.வின் இரண்டாவது மாநாட்டிற்கு வந்த தொண்டர்களால் மதுரையே அதிர்ந்தது

  • August 21, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மாலை மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர் என எதிர்பார்க்கப்படுவதால்இ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் இத்தகைய பரந்த பரப்பளவிலான மைதானத்தில் மாநாடு நடத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள திடலில்இ 250 ஏக்கர் மாநாட்டிற்காக […]

உள்ளூர்

இலங்கைக்கு ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்

  • August 14, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த பொறுப்பை நீண்டகாலமாக ஏற்க மறுத்துள்ளதை கண்டித்து, ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம், இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவித்தல், பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல், காணாமல் போனவர்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் உயிரற்ற இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது

  • August 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் அக்கரை கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கரையில் ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்று (07-08) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்

மன்னார் மக்களை வேட்பாளர் அநுர நம்ப வைத்தார் ஜனாதிபதி அநுர ஏமாற்றினார்- கஜேந்திரன்

  • August 6, 2025
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலின்போது மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடைமுறைப்படுத்தப்படாது என உறுதியளித்திருந்த போதிலும், தற்போது அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவது மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை திட்டத்தை நிறுத்தும் கோரிக்கையுடன், மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து […]

உள்ளூர்

மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் கைது

  • August 4, 2025
  • 0 Comments

இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 74 வயதுடைய மாமியாரே கொலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தினை தொடர் தகவல்களில்இ இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். […]