மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்
குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) இடம்பெற்றது. 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாரியபொல பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.