உள்ளூர்

யாழில் மனைவி தாய்வீட்டிற்கு சென்றதால் கணவன் உயிர்மாய்ப்பு

  • July 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி ஆனையிறவில் டிப்பரும் ஹையேஸ் வாகனமும் விபத்து பயணிகள் படுகாயம்

  • July 8, 2025
  • 0 Comments

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையேஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் ஹையேஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காயம் அடைந்த […]

உள்ளூர்

செம்மணியில் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது

  • July 6, 2025
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன. குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (04-07) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு […]

உள்ளூர்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் மாற்றம்!

  • June 30, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் […]

உள்ளூர்

கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

  • June 29, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் […]

கனடா

ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் துப்பாக்கி சூடு:2 பேர் படுகாயம்!

  • June 26, 2025
  • 0 Comments

டொராண்டோ ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், டான் மில்ஸ் சாலை மற்றும் செயின்ட் டெனிஸ் டிரைவ் சந்திக்குமிடத்தில், எக்லிங்டன் அவென்யூ அருகே உள்ள பகுதியில், இன்று அதிகாலை 2 மணிக்கு முன் நிகழ்ந்துள்ளது. 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள், உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் இருந்தாலும், மிகுந்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக […]

இந்தியா

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

  • June 26, 2025
  • 0 Comments

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர். ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு […]

இந்தியா சினிமா

நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைபொருள் வழக்கில் கைது

  • June 26, 2025
  • 0 Comments

அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை […]

உள்ளூர்

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் இந்நாள் எம்பிக்களை சந்தித்தார்

  • June 26, 2025
  • 0 Comments

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்றரவு (25-06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

வடக்கில் 10 பொலிஸ் நிலையங்களை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதா?

  • June 14, 2025
  • 0 Comments

வடக்கில் சுமார் 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இனந்தெரியாத நபர் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸாhர் விசாரணைகள் ஆரம்பித்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் […]