ஈபிடிபியுடன் கூட்டணி இல்லை ஆதரவுக்காகவே சந்திப்பு நடைப்பெற்றது- சுமந்திரன்
நாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தோமே தவிர, கொள்கைகள் சார்ந்து பேசவில்லை. அதே அடிப்படையில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கொள்கை சார்ந்து எதனையும் பேசவில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணியில் உள்ள மனிதப்புதைகுழி தோண்டப்பட்டுவரும் நிலையில், அதனை அண்மித்த பகுதிகளிலும் […]