உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் பிரச்சாரம் செய்தவர் கைது

  • May 6, 2025
  • 0 Comments

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலிஸார், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த நபரை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளரான […]

இந்தியா

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் முதல் முதலாக ஊடகவியலாளர்களை சந்தித்தார்

  • May 1, 2025
  • 0 Comments

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர். விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில்; மே தினம் கலைவிளையாட்டு நிகழ்வுகளாக மக்கள் கொண்டாடினர்

  • May 1, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்று மே தின நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினர். அந்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மே தினத்தை கொண்டாடியுள்ளனர். வங்காலை மீனவ சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் வங்காலை விளையாட்டுக் கழகம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏற்பட்ட நிலை!

  • April 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ். புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அண்மையில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த யுவதியால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கைது செய்து ,விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி தப்பிச் சென்ற பெண்! – யாழில் சம்பவம்

  • April 23, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் வட்டுக்கோட்டையில் நேற்று (22-04) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான அப்பாடசாலையின் மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

74 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் கைது

  • April 23, 2025
  • 0 Comments

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு’, ‘கைது செய் போதை குற்றவாளியை கைது செய்’, ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டு நேற்றுவரை (22-04) 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது

  • April 23, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில் 23 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 14 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தியா முக்கிய செய்திகள்

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

  • April 22, 2025
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அரசாணை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசருக்கு பௌத்த தோரர்களின் பிரார்த்தனையும் அஞ்சலியும்

  • April 22, 2025
  • 0 Comments

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மத குருமார்கள் குழு பிரர்த்தனையும் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக தனது 88 வயதில் நேற்று (21-04) நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார். அவரின் மறைவுச் செய்தி வெளியாகி சில மணி நேரங்களுக்குப் பின்னர் கம்பஹா, மக்கோல பகுதியிலுள்ள விகாரையில் பாப்பரசர் பிரான்சிஸுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர்

கத்தோலிக்கர்களின் ஆன்மீக தலைவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

  • April 22, 2025
  • 0 Comments

நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசருக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும் தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் பரிசுத்த பாப்பரசர் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்த வத்திக்கானில் உள்ள அவரது இல்லமான காஸா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி […]