உள்ளூர்

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரிக்கை

  • July 24, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழி தமிழர்களின் கருவைக்கூட அறுக்கும் அளவிலான பயங்கரமான செயலை எடுத்துக்காட்டுகிறது என்பதைக் கவனித்தல் அவசியம் எனத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், குழந்தைகள், சிறார்கள், முதியவர்கள் என பலரும் புதைக்கப்பட்டுள்ளமை, குறிப்பாக தாயின் கருவிலேயே கருவைக்கூட அழித்தமை, தமிழின அழிப்புக்கான உயிர் சாட்சியாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், உள்ளக விசாரணைகள் தோல்வியடைந்துள்ளன என்பதையும், அதனூடாக வெளியான தகவல்கள் போலியானவையாக இருந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட […]

உள்ளூர்

புத்தளத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

  • July 23, 2025
  • 0 Comments

புத்தளத்தின் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய பகுதியில் நேற்று (22-07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கியால் சூடு செய்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 30 வயதுடைய பெண் உயிரிழந்ததுடன், 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், உயிரிழந்த பெண் முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

  • July 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாவாந்துறை […]

உள்ளூர்

கணவனை கொலை செய்து சடலத்தை புதைத்த மனைவி 2 மாதங்களின் பின் தோண்டிய பொலிஸார்.

  • July 18, 2025
  • 0 Comments

அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல – ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில், காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலம் நேற்று (17) வலஸ்முல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ளதாக கடந்த 8ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து 16ஆம் திகதி அவர் வசித்த வீட்டின் பின்புறத்தில் நடைபெற்ற சோதனையின் போது மனிதக் கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தினமும் மனைவியுடன் தகராறில் […]

உள்ளூர்

கிழக்கு கண்டெய்னர் முனையம் தனியாராக்கப்படவில்லையென என புபுதுவின் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது

  • July 17, 2025
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையம் (ECT) ) தனியாராக்கப்படுவதாக முன்னணி சோசலீச கட்சி (FSP) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தத் தரப்பில், அண்மையில் ECT முனையத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Colombo Eastern Container Terminal (Private) Limited எனும் புதிய வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் தனியாராக்கல் முயற்சி இருக்கின்றதா எனக் கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்தளித்த துறைமுகங்கள் மற்றும் குடிமா விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தை இந்தியா உன்னிப்பாக பார்க்கின்றது

  • July 12, 2025
  • 0 Comments

ஜெனரல் அசீம் முனீர் அண்மையில் இலங்கைக்கு முக்கியமான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரது வருகை சாதாரண மரியாதை விஜயமாக மட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் உள்ள பெரிய நிலைத்திறனியல் நோக்கங்களை மேற்கொண்டதாக இந்தியா பார்க்கின்றது இந்த விஜயத்தின் போது அவர் இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ பயிற்சி, உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக வெளியிடப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வை இந்திய பாதுகாப்பு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாணந்துறையில் இன்று காலை துப்பாக்கி சூடு ஒருவர் காயம்.சந்தேக நபர் தப்பியோட்டம்

  • July 11, 2025
  • 0 Comments

இன்று காலையில், ஹிரண பொலிஸ் பிரதேசத்தின் மாலமுள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கி சுடுதலால் காயமடைந்த நபர் பானந்துரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் காயமடைந்தவர் 32 வயது, மாலமுள்ள பகுதியில் வசிப்பவர். துப்பாக்கி சூட்டிற்கான காரணமும் சந்தேக நபர்களின் தொடர்பும் இதுவரை தெரியவில்லை; துப்பாக்கி சூடுக்கு பிஸ்டல்ரக துப்பாக்கி […]

உள்ளூர்

யாழ் அச்சுவேலியில் கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சித்த 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

  • June 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மாலை (26-06) இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10) அரசடி, தோப்பு என்ற முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். தனது பேரனுடன் தோட்டத்துக்கு சென்ற சிறுவன், பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் […]

கனடா

ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் துப்பாக்கி சூடு:2 பேர் படுகாயம்!

  • June 26, 2025
  • 0 Comments

டொராண்டோ ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், டான் மில்ஸ் சாலை மற்றும் செயின்ட் டெனிஸ் டிரைவ் சந்திக்குமிடத்தில், எக்லிங்டன் அவென்யூ அருகே உள்ள பகுதியில், இன்று அதிகாலை 2 மணிக்கு முன் நிகழ்ந்துள்ளது. 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள், உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் இருந்தாலும், மிகுந்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக […]

இந்தியா

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

  • June 26, 2025
  • 0 Comments

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர். ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு […]