இந்தியா சினிமா

நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைபொருள் வழக்கில் கைது

  • June 26, 2025
  • 0 Comments

அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை […]

உள்ளூர்

வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்குமிடையிலான சந்திப்பொன்று நடைப்பெற்றது

  • June 26, 2025
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலி அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் […]

உலகம் முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் பலி, 400 பேர் காயமென காசா தெரிவித்துள்ளது.

  • June 26, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் காசா மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்து, சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பல மரணங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பலியானவர்களின் பிணங்களை குடும்பத்தினர் எடுத்து செல்லும் போது ஏற்பட்ட அவலக் காட்சிகள் உலகை உலுக்கியன. இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெற்ற போர் நடவடிக்கையில் இதுவரை 56,156 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]

உள்ளூர்

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் இந்நாள் எம்பிக்களை சந்தித்தார்

  • June 26, 2025
  • 0 Comments

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்றரவு (25-06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் பேசாலையில் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது – அமைச்சர் சந்திரசேகர்

  • June 25, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்து மீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்திற்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (24-06) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ […]

உள்ளூர்

வடக்கிலே தமிழர்கள் வற்றிபோகின்றார்கள் என ஆறு திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார்.

  • June 25, 2025
  • 0 Comments

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் நேற்று (24-06) நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம் ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும் மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த நாங்கள் ஏன் சுதேசியத்தைப் பாதுகாக்கக்கூடாது அதைப்பற்றி பேசக் கூடாது என்று அன்றே அடியெடுத்துக்கொடுத்தவர். அதனாலேயே அவரது சிலையின் பெயர்ப்பலகையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதலின் இலக்கு என்ன? ஆட்சியை கவிழ்ப்பதா அணுசக்தியை அழிப்பதா?

  • June 14, 2025
  • 0 Comments

இரானின் அணுசக்தி மூலம் இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனை அழிப்பதே வெள்ளிக்கிழமை தான் நடத்திய தாக்குதல்களின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அந்த பெரிய இலக்கு. இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஒரு சங்கிலித் தொடர் போன்ற எதிர்வினையை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் ஏற்படும் அமைதியின்மை இறுதியில் […]

உள்ளூர்

வடக்கில் 10 பொலிஸ் நிலையங்களை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதா?

  • June 14, 2025
  • 0 Comments

வடக்கில் சுமார் 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இனந்தெரியாத நபர் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸாhர் விசாரணைகள் ஆரம்பித்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் […]

உள்ளூர்

ஈபிடிபியுடன் கூட்டணி இல்லை ஆதரவுக்காகவே சந்திப்பு நடைப்பெற்றது- சுமந்திரன்

  • June 7, 2025
  • 0 Comments

நாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தோமே தவிர, கொள்கைகள் சார்ந்து பேசவில்லை. அதே அடிப்படையில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கொள்கை சார்ந்து எதனையும் பேசவில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணியில் உள்ள மனிதப்புதைகுழி தோண்டப்பட்டுவரும் நிலையில், அதனை அண்மித்த பகுதிகளிலும் […]

உள்ளூர்

இந்திய மீனவர்களை சுட்டு பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனம் வேண்டுகோள்

  • June 6, 2025
  • 0 Comments

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது […]