உள்ளூர்

கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி கண்டுபிடிப்பு!

  • May 31, 2025
  • 0 Comments

கற்பிட்டி – உச்சமுனை தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் என்பன நேற்று முன்தினம் (29) கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி விஜய கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர் லக்ஸ்மன் றன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போதுஇ காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்றும்இ பாவிக்கப்படாத தோட்டாவொன்றும்இ வெற்றுத் தோட்டா ஒன்றும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தெற்கு கடல் பகுதியில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி

  • May 29, 2025
  • 0 Comments

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், 02 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து 600 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்கு பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதன்போது 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. […]

உள்ளூர்

புhடசாலைகளில் சிறுவர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்படுவது அதிகரித்துள் பிரதமர் ஏற்பு

  • May 28, 2025
  • 0 Comments

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27-05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து […]

உள்ளூர்

இந்திய – இலங்கை அரசின் நிதியில் மன்னாரில் நிறுவிய வீடுகள் ; பயனாளிகளிடம் கையளிப்பு

  • May 27, 2025
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் கடந்த திங்கட்கிழமை (26-05) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆலோசனை

  • May 26, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு […]

உலகம்

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் 50 வீதம் வரி விதிப்பு

  • May 26, 2025
  • 0 Comments

உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் […]

உலகம்

உக்ரைனின் விமானத் தாக்குதலில் இருந்து ரஷிய ஜனாதிபதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

  • May 26, 2025
  • 0 Comments

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். புதினின் ஹெலிகாப்டர் பாதையில் […]

உள்ளூர்

உள்ளூராட்சியில் கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சிகளுக்கு ஆதரவென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

  • May 26, 2025
  • 0 Comments

தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்கும் என தமிழ்தேசிய பேரவையின் தலைவரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம தெரிவித்துள்ளார். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற […]

உள்ளூர்

யாழில் 30 வயது யுவதி திடீரென மரணம். அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • May 23, 2025
  • 0 Comments

நேற்று முன்தினமிரவு (21-05 இரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி புதன்கிழமை (21-05) இரவு சாப்பிட்டுவிட்டு இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார். பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கே பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

  • May 22, 2025
  • 0 Comments

சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு செய்திகளை அனுப்பியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அளித்த முறையான புகாரைத் தொடர்ந்தும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், 62 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (21) காவலில் வைக்கப்பட்டார். பொலிஸாரின் தகவலின் படி, இந்தச் செய்திகள் நீதிபதிக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியதால், விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ‘சட்டமன்ற வழக்கறிஞரால் உயர் […]