உள்ளூர் முக்கிய செய்திகள்

சீரியல்கள் போல அண்ணனும் தம்பியும் மாறி மாறி தமக்கிடையே வெட்டி விளையாடுகின்றனர்

  • May 21, 2025
  • 0 Comments

பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை (20-05) இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில், காயமடைந்த இளைய சககோதரரின் உயிர், அறுவை சிகிச்சை நிபுணரின் திறமையால் காப்பாற்றப்பட்டதாக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் முகநூலில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,”இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த […]

உள்ளூர்

காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கலை தடுக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, சுவிட்ஸர்லாந்து நாடுகளிடம் பேரவை வேண்டுகோள்

  • May 21, 2025
  • 0 Comments

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் […]

உள்ளூர்

மஹிந்த, குடும்பம் மரணித்த படையினருக்கு அஞ்சலி செலுத்தினர்

  • May 20, 2025
  • 0 Comments

முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘இன்று நாங்கள் […]

உள்ளூர்

கர்ப்பமான மனைவியையும் வயிற்றிலுள்ள சிசுவையும் தூக்கில் தொங்கவிட்ட கொன்ற கணவன்- மாத்தறையில் சம்பவம்

  • May 19, 2025
  • 0 Comments

மாத்தறை தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 06.45 மணியளவில் மணைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார். உடனே ஊராருக்கு சந்தேகம் ஏற்படவே கணவன் மாயமாக சென்று பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார். ஊரார் உடனே 1990 அம்பியுலன்ஷ் மற்றும் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். குறித்தப்பெண் இறந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் இந்த பெண் 9 மாதங்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

30 வருட யுத்தத்தில் ஊனமற்று சிகிச்சை பெறும் படையினரை ஜனாதிபதி இன்று சந்தித்தார்

  • May 19, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார். படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்குள்ள படையினர் வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார். முப்பது வருட யுத்த சூழ்நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலசந்திரன் இன்றும் உயிர்வாழ்கின்றான், என்றென்றும் உயிர்வாழ்வான்- நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் பஞ்சாபின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

  • May 19, 2025
  • 0 Comments

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங்தெரிவித்துள்ளார். மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப்பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது. பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன் இந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி நடித்தது பேரானந்தமென்கிறார் தென்னிந்திய நடிகர் எம்.எஸ் பாஸ்கர்

  • May 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில் , யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் ‘கர்மா’ எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்த எம். எஸ் பாஸ்கர் , யாழ். ஊடக சமயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து 42 நாட் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அன்னையர் தினமான நேற்று தன்னுயிர் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய தாய்- நெகிழ்ச்சி சம்பவம்

  • May 12, 2025
  • 0 Comments

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் நேற்று (11-05) அதிகாலை பேரூந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். குழந்தையை காப்பாற்றிய 45 வயதுடைய தாய் பின்னர் உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது. கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் தொடரூந்து மோதி ஒருவர் உயிரிழப்பு;

  • May 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்து பளை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் பளை பகுதியில் இடம்பெற்றது. யாழில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வந்த புகையிரதம், பளை சந்தியில் ஓர் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் […]

முக்கிய செய்திகள்

இந்தியாவில் பதற்றம் 18 விமான நிலையங்கள் மூடல் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

  • May 7, 2025
  • 0 Comments

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பதற்றத்தை தொடர்ந்து வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று (புதன்கிழமை) […]