உள்ளூர் முக்கிய செய்திகள்

12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி தப்பிச் சென்ற பெண்! – யாழில் சம்பவம்

  • April 23, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் வட்டுக்கோட்டையில் நேற்று (22-04) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான அப்பாடசாலையின் மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

74 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் கைது

  • April 23, 2025
  • 0 Comments

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு’, ‘கைது செய் போதை குற்றவாளியை கைது செய்’, ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டு நேற்றுவரை (22-04) 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது

  • April 23, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில் 23 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 14 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூர்

மன்னார் கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகுசேவைக்கு அனுமதி

  • April 23, 2025
  • 0 Comments

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மணற்திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (22-04) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்தநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

  • April 22, 2025
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அரசாணை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த […]

உள்ளூர்

ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்டனர்

  • April 21, 2025
  • 0 Comments

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பளையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடி நீர் விநியோக நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு, பொது மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டனர். ஆசிய வங்கி பிரதிநிதிகளுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டனர். பளை பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளின் நீர் குடிப்பதற்க பொருத்தமற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தந்தை காலமானார்

  • April 21, 2025
  • 0 Comments

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறியதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந் நிலையில் லைத்தியசாலையிலிருந்து இருப்பிடம் திரும்பிய அவர் ஓய்நிலையில் இருந்த போதே அவர் காலமானார்  

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

  • April 18, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறிவுறுத்தியுள்ளார். நேற்று (17-04) நடைபெற்ற விஷேட கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கும் […]

உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்தபோது கோட்டாபய இடமாற்ற உத்தரவுட்டதாக ஜனாதிபதிக்கு முன்னாள் இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்

  • April 18, 2025
  • 0 Comments

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகளிற்கு தடுக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார் 2019 இல் விவரிக்கப்படாத இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிலிருந்து காரணம் தெரிவிக்கப்படாமல் உடனடியாக தான் இடமாற்றப்பட்டதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவர்இலங்கையின் தேசிய பாதுகாப்பு […]

உலகம் கனடா முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்து பாதிரி கனடாவில் பாலியல் சேட்டையென கனடா பொலிஸார் குற்றச்சாட்டு

  • April 17, 2025
  • 0 Comments

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 44 வயதான மதப்பிரசாரகர் மீதே யோர்க் பிராந்திய பொலிஸார் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர். சந்தேக நபர் மீது 7 பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தொடர்ச்சியான பாலியல் தாக்குதல்களில் ஒன்ராறியோ மத போதகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 44 வயதான அந்த நபர் ஒன்ராறியோவின் பிக்கரிங்கில் உள்ள ஒரு குடியிருப்பு இடத்தில் மத வகுப்புகளை கற்பித்ததாக யார்க் பிராந்திய போலீசார் தெரிpவத்துளளனர் பாலியல் தாக்குதல்கள் ஜனவரி 2021 முதல் கடந்த […]