உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

  • August 21, 2025
  • 0 Comments

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. உறுப்பினர் […]

உள்ளூர்

புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனம்!

  • August 12, 2025
  • 0 Comments

நாட்டின் 37ஆம் பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி அங்கீகாரம் வழங்கியது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர்

திருமலையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாள் போராட்டம் நடைப்பெற்றது

  • August 10, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாளாகும். போர் பாதிப்புகளால் நீண்டகாலமாக சிக்கலில் உள்ள திரியாய் மக்கள், இன்றும் நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து, திரியாய் மக்களும், பல்வேறு இடங்களில் இருந்து வந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முரண்களை இரு சமூக தலைவர்களும் தீர்க்கமுடியும்- ரிஸாட் பதியுதீன் எம்.பி.

  • August 6, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும், அவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை எனவும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்விடயங்களைத் தீர்க்கும் முயற்சியை விட, அவற்றை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அனுபவங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன என்றும் கூறினார். ஓட்டமாவடி பிரதேச சபையை தமது கட்சியே வென்றிருந்த போதும், ஆட்சி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறாமகன் சஸிந்திர ராஜபக்ச விளக்கமறியல்

  • August 6, 2025
  • 0 Comments

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர ராஜபக்சவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அதானியின் மின் கோபுர பாகங்கள் மன்னரை வந்தடைந்தது

  • August 6, 2025
  • 0 Comments

காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது. நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் […]

உள்ளூர்

மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் கைது

  • August 4, 2025
  • 0 Comments

இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 74 வயதுடைய மாமியாரே கொலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தினை தொடர் தகவல்களில்இ இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்

  • August 4, 2025
  • 0 Comments

குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) இடம்பெற்றது. 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாரியபொல பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.    

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

  • August 2, 2025
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கு மாகாண பிரதம செயலாளர் […]

உள்ளூர்

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • August 1, 2025
  • 0 Comments

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் செய்த அவர், அங்கு உத்தியோகத்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார். அமைச்சருடன் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த […]