உள்ளூர்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது- அமைச்சர் சந்தன அபேரத்ன

  • July 31, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார். இதே சட்டமூலத்துடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணை, அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா. சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளுடன் இது ஒத்துள்ளது. எனவே இதை மீண்டும் ஆராய தேவையில்லை என்றும், உடனடியாக நிறைவேற்ற […]

உலகம் உள்ளூர் முக்கிய செய்திகள்

ரஸ்சியாவில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து ஆழிப்ரேரலை உருவானது

  • July 30, 2025
  • 0 Comments

ரஸ்சியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், பெட்ரோ பாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்க் நகரத்திலிருந்து சுமார் 136 கிலோமீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டது. அதின் தாக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி, மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். வீடுகளில் உள்ள பொருட்கள் தரையில் சரிந்து விழுந்தன் ஜன்னல்கள் உடைந்தன் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. துரிதமாக மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

  • July 29, 2025
  • 0 Comments

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • July 29, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

  • July 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாவாந்துறை […]

உள்ளூர்

கணவனை கொலை செய்து சடலத்தை புதைத்த மனைவி 2 மாதங்களின் பின் தோண்டிய பொலிஸார்.

  • July 18, 2025
  • 0 Comments

அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல – ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில், காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலம் நேற்று (17) வலஸ்முல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ளதாக கடந்த 8ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து 16ஆம் திகதி அவர் வசித்த வீட்டின் பின்புறத்தில் நடைபெற்ற சோதனையின் போது மனிதக் கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தினமும் மனைவியுடன் தகராறில் […]

உள்ளூர்

இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் வேலைநிறுத்தம்

  • July 15, 2025
  • 0 Comments

இன்று (ஜூலை 15) நள்ளிரவு முதல், இலங்கை தபால் சேவைகளின் அலுவலகங்களிலும் நிர்வாகத் துறைகளிலும் ஊழியர்கள் அதிக நேர வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளனர் என தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம், பணியில் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படுகிறது என, அந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத் தரப்பினரின் இந்த நடவடிக்கையால், நாளைய தினங்களில் அறிவிப்பு இல்லாத தாமதங்கள் மற்றும் சேவை இடையூறுகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம்.

உள்ளூர்

சர்சைக்குரிய 323 கொள்கலன்களையும் வர்த்தக வசதியை இலகுபடுத்தும் வகையில்; விடுவிக்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவிப்பு

  • July 15, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டின் முதற்காலத்தில் சுங்கத்துறை மூலமாக 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், வழமைக்கே புறம்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், அந்தக் கொள்கலன்களில் மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன. இந்த விடயத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சுங்கத்துறை ஊடக பேச்சாளர், கூடுதல் பணிப்பாளர் நாயகம் சீவாலி அருக்கொடை, வருமானத்தை சேகரிக்க மற்றும் வர்த்தகத்தை எளிதாக்க வேண்டிய பொறுப்பை சுங்கத்துறை வகிக்கின்றதாக கூறினார். ‘சரக்குகளை நீண்ட […]

கட்டுரை

நட்புகள் உண்மையாகவே அனைத்தும் தானா?

  • July 14, 2025
  • 0 Comments

பல நேரங்களில் அது உண்மையாகவே உணரப்படுகிறது, அல்லவா? புத்தர் காலத்தில் நடந்த ஒரு அழகான நிகழ்வை இந்தக் கருத்துடன் நினைவுகூரலாம். ஒரு நாள் ஆனந்த தேரர், “பகவனே, நல்ல நண்பர்கள், நல்ல உறவினர், நல்ல தோழர்கள் ஆகியோர் ஆன்மீக வாழ்வின் பாதியைக் கொண்டவர்களே என நினைக்கிறேன்” எனக் கூறினார். அதற்கு புத்தர் பதிலளிக்கும்போது, “இல்லை ஆனந்தா, இப்படிப் பேசாதே. நல்ல நண்பர்கள், நல்ல உறவினர், நல்ல தோழர்கள் என்பதே முழுமையான ஆன்மீக வாழ்வு” என்றார். இது ஒரு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்க வரிவிதிப்பு இலங்கையின் பொருளாதார நரம்பில் நீளும் அழுத்தம்

  • July 13, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசு, சமீபத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மேலதிக வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் உலக வணிகத்தில் அதிர்வெண்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இலங்கையின் சில முக்கிய ஏற்றுமதி பொருட்கள் – குறிப்பாக ஆடைத் தயாரிப்புகள், தேயிலை, ரப்பர் சார்ந்த பொருட்கள் என்பவை இதில் இடம் பெற்றுள்ளன. இதை ஒரு சாதாரண வரித்தீர்மானமாக எண்ணுதல் தவறானதாகும் ஏனெனில் அமெரிக்கா இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தை. அதிலும் குறிப்பாக ஆடைத் […]