உள்ளூர்

இலங்கையின் கல்விதுறையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மாற்றங்கள் ஆரம்பமென பிரதமர் தெரிவிப்பு

  • July 13, 2025
  • 0 Comments

இந்த மாற்றங்கள் 2026ஆம் ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளன. பிற வகுப்புகளுக்கு பின்னர் நீட்டிக்கப்படும். இந்த புதிய திட்டம் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இது மாணவர்களை நவீன உலகில் வாழத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவும் திறமையும் கொண்ட குடிமக்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் பங்களிக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் […]

உள்ளூர்

செம்மணியில் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது

  • July 6, 2025
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன. குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (04-07) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு […]

விளம்பரம்

வீட்டில் இருந்தபடியே இலங்கையிலுள்ள நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு!

  • July 5, 2025
  • 0 Comments

நீங்கள் கிடைத்த வாழ்க்கையை வாழ விரும்பும் நபரா? அல்லது நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்க எண்ணும் நபரா? வீட்டில் இருந்தபடியே இலங்கையிலுள்ள நிறுவனமொன்றில் வேலை செய்து மேலதிக வருமானம் ஈட்டக்கூடிய இலவச வாய்ப்பு சிறந்த அனுபவத்துடன் சரியான வழிகாட்டலை வழங்கிட நாம் தயார்! {{CODE 1}} உங்கள் முயற்சி + எங்கள் பயிற்சி = உங்கள் கனவு இணைந்து கொள்வது முற்றிலும் இலவசம் ☺இணைந்து கொள்வதற்கு எந்த கட்டணமும் இல்லை.(முதலீடு இல்லை.) மறைமுகமான கட்டணங்கள் எதுவும் இல்லை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மதுபான பார்ட்டியில் வர்த்தக நண்பனை போட்டு தள்ளி சக நண்பர்கள்

  • July 4, 2025
  • 0 Comments

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள வர்த்தகரின் நண்பனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட […]

விளம்பரம்

🛑 வேலைவாய்ப்பு 🛑

  • July 2, 2025
  • 0 Comments

🔖யாழ் கோப்பாயிலுள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு  ஊழியர்கள் தேவை….. 🔴 சமையலாளர் 🔹 ஆண் 🔴 குளிர்பானம் தயாரிப்பவர் (Juice maker) 🔹ஆண், பெண்  🔴 உணவு பரிமாறுபவர்கள் (Waiter) 🔹ஆண், பெண்  📌தங்குமிட வசதிகள் உண்டு ♦️கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும் 🔉 தொடர்புகளுக்கு :- 077-413-3714 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவதுடன் படகுகளும் பறிமுதல் செய்யப்படும் – கடற்றொழில் அமைச்சர் https://www.youtube.com/@pathivunews/videos

உள்ளூர்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் மாற்றம்!

  • June 30, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் […]

உலகம்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

  • June 27, 2025
  • 0 Comments

  ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை […]

உள்ளூர்

யாழ் அச்சுவேலியில் கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சித்த 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

  • June 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மாலை (26-06) இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10) அரசடி, தோப்பு என்ற முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். தனது பேரனுடன் தோட்டத்துக்கு சென்ற சிறுவன், பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணிமனித புதைகுழி அகழ்வின் போது சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியமென சட்டத்தரணிகள் தெரிவிப்பு

  • June 26, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது. செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான […]

உள்ளூர்

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் இந்நாள் எம்பிக்களை சந்தித்தார்

  • June 26, 2025
  • 0 Comments

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்றரவு (25-06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.