உள்ளூர்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிக்கை!

  • May 31, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 274 ஆகவும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 325 ஆகவும் உள்ளது. 95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தெற்கு கடல் பகுதியில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி

  • May 29, 2025
  • 0 Comments

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், 02 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து 600 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்கு பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதன்போது 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. […]

உள்ளூர்

கொவிட் 19 திரிபு பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனை ஆரம்பம்

  • May 29, 2025
  • 0 Comments

புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கோவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை […]

உள்ளூர்

புhடசாலைகளில் சிறுவர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்படுவது அதிகரித்துள் பிரதமர் ஏற்பு

  • May 28, 2025
  • 0 Comments

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27-05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புதிய கொவிட் திரிபை அரசாங்கம் கவனமாக அவதானித்து வருகிறதென அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்

  • May 27, 2025
  • 0 Comments

அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய கொவிட் 19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கொரானா தொற்று அதிகரித்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆலோசனை

  • May 26, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு […]

உலகம்

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் 50 வீதம் வரி விதிப்பு

  • May 26, 2025
  • 0 Comments

உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் […]

உலகம்

உக்ரைனின் விமானத் தாக்குதலில் இருந்து ரஷிய ஜனாதிபதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

  • May 26, 2025
  • 0 Comments

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். புதினின் ஹெலிகாப்டர் பாதையில் […]

உள்ளூர்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு மாங்காய் விற்ற பட்டதாரி

  • May 26, 2025
  • 0 Comments

திருகோணமலை – கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகய்திற்கு முன்பாக ஒரு பட்டதாரி வித்தியாசமான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு பட்டம்பெற்று வெளியேறிய சீ.எம் மொஹமட் சபீர் என்பவரே இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மாங்காய் விற்பனை செய்வது போல் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தாம் பட்டம் பெற்று வெளியேறிய காலத்தில் இருந்தே பலவகையான பரீட்சைகளை தாம் எழுதியதாகவும் இருப்பினும் இந்த அரச கட்டமைப்பானது தம்மைப்போன்ற பலரை இன்னமும் புறக்கணித்து வருவதாகவும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தொடரும் சிக்கல்

  • May 26, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், தமது கூட்டணி முன்னிலை பெற்றுள்ள சபைகளில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது. அதேநேரம், எந்தவொரு தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. […]