உள்ளூர் முக்கிய செய்திகள்

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு எதிராக அரசுக்கு நவம்பர் 7ஆம் திகதி வரை காலக்கெடு

  • November 5, 2025
  • 0 Comments

அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டி பிற்பகல் 2 மணி வரை நடத்தும் அரசின் முடிவை எதிர்த்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அரசுக்கு நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

உள்ளூர்

பசில் ராஜபக்ஸ தப்பமுடியாதவாறு இறுக்கப்பட்டுள்ள விசாரணை. விழி பிதுங்கும் மகிந்த குடும்பம்

  • November 5, 2025
  • 0 Comments

ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, 2010 முதல் 2015 வரை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ‘லஞ்சம், ஊழல் மற்றும் வீண்வினைக்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின்’ தலைவர் கமந்த துஷாரா, இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு CIABOC–க்கு முறைப்பாடு செய்துள்ளார். அவர் தனது முறைப்பாட்டில்;, முன்னாள் […]

உள்ளூர்

போதைக்கு எதிரான போரில் இணையுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்அமைச்சர் சந்திரசேகர்

  • November 4, 2025
  • 0 Comments

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேசியப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம், அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் மற்றும் குற்றவாளிகளை முழுமையாக துடைத்தெறிவோம். சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்,” என அமைச்சர் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து 2025 நவம்பர் 4ஆம் தேதி சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடத்திய “நடமாடும் சேவை” நிகழ்வில் […]

உள்ளூர்

யாழ் பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் போர்க்காலத்தில் மறைத்து வைக்கப்பட்டவையாகும்- பொலிஸார்.

  • November 3, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் கூரையில் மறைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் போருக்காலத்திலிருந்தே அங்கு இருந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் பேசிய காவல்துறை ஊடகப்பேச்சாளர் மற்றும் உதவி பொலி மா அதிபர், வழக்கறிஞர் எப்.யூ. வுட்லர் தெரிவித்ததாவது: ‘இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாயுதங்கள் நீண்ட காலமாக அங்கு இருந்திருக்கலாம்; பெரும்பாலும் போர்காலத்திலிருந்தே இருக்கக்கூடும் என நாங்கள் நம்புகின்றோம்.’ காவல்துறையின் தகவலின்படி, இவ்வாயுதங்களும் வெடிமருந்துகளும் பல்கலைக்கழக நூலகத்தின் கூரையில் மறைக்கப்பட்டிருந்தன. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி […]

உள்ளூர்

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் திருகோணமலையில் விபத்திற்குள்ளானது

  • November 2, 2025
  • 0 Comments

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில், திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த துறை முகத்தில் இருந்து மன்னார் நோக்கி காற்றாலை எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியா – இலங்கை விவசாய ஒத்துழைப்புக்கான கூட்டு செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது

  • November 1, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் தொடர்பான முதலாவது கூட்டு செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (30-10) இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் இலங்கை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இலங்கை சார்பில் விவசாயத் திணைக்களத்தின் மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஜி.வி. சியாமலி, கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர் பி.எஸ்.எஸ். பெரேரா […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது

  • November 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனை செய்து வந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர்

பொலிஸ் உயரதிகளுக்கிடையில் உச்சக்கட்ட முரண்பாடு

  • October 30, 2025
  • 0 Comments

பொலிஸ் கண்காணிப்பாளர் (IGP) பிரியந்த வீரசூரிய, சிரேஸ்ட்ட பிரதி கண்காணிப்பாளர் (SDIG) மீது தேசிய பொலிஸ் ஆணைக்குழு (NPC) மற்றும் குற்றப்புலனாய்வு துறையிடம் (CID) முறைப்பாடு செய்துள்ளார். விரைவில், சம்பந்தப்பட்ட SDIG-ஐ, பொலிஸ் தலைமையகத்தில் உள்ள உயர்மட்ட பதவியில் உள்ள அவர், மாற்றம் செய்யுமாறு மற்றும் அவருக்கு எதிராக ஒழுங்கு விசாரணை தொடங்குமாறு IGP வீரசூரிய NPC-யை கேட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிப்பதாவது, SDIG, IGP மற்றும் பிற மூத்த அதிகாரிகளின் குறித்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணில் கைதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • October 30, 2025
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 2026 ஜனவரி 28 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. நேற்று (29-11) நடைபெற்ற விசாரணையில், கோட்டை நீதவான் இஸுரு நெத்திக்குமாரா குற்றப்புலனாய்வு துறைக்கு (ஊஐனு) விசாரணையை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் பணித்தார். மேலும், கடந்த விசாரணை நாளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்த சம்பவங்கள் […]

உள்ளூர்

மாகாணசபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலிருப்பது ஜனநாயக விரோதம்- தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்

  • October 26, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலுக்கான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்கான தேவையான சூழல் உருவாக்கப்பட்டால், அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிழையால் மாகாணசபைத் தேர்தல் காலவரையற்ற வகையில் ஒத்திவைக்கப்படவில்லை. பாராளுமன்றம் கொண்டு வந்த புதிய தேர்தல் […]