உள்ளூர்

காத்தான்குடியில் மனிதத் தலை மீட்பு

  • October 26, 2025
  • 0 Comments

காத்தான்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் 66 வயது நபரின் மனிதத் தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். முதற்கட்ட விசாரணைகளின் போது, அந்த நபர் குளத்தில் நீராடியபோது முதலை தாக்குதலுக்கு ஆளானிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மலளநயான குளத்தில் அதிக அளவில் முதலைகள் இருப்பது முன்பிருந்தே அறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட மனிதத் தலை பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

71 வயது வயோதிப பெண் வற்புனர்வின் பின் கொலை

  • October 25, 2025
  • 0 Comments

மினுவாங்கொடை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வற்புனர்வுக்குட்படுத்தப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் பூசி, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பது போன்ற கொடூரச் செயல் ஒன்று பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்த வயோதிப மாதுவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அந்த பெண் தனிமையாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று (24) அயல் வீட்டுப் பெண் ஒருவர் […]

உள்ளூர்

நாட்டிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது- நீர்ப்பாசனத் திணைக்களம்

  • October 25, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், களனி, அத்தனகலு, கிங் மற்றும் பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைவீழ்ச்சியினால் களுகங்கையைச் சூழ்ந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கை […]

உள்ளூர்

இலங்கையில் நீதிக்கான ஒரே வழி – சர்வதேச சுயாதீன விசாரணை

  • September 19, 2025
  • 0 Comments

சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைய முடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜெனிவா ஊடக மையத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலை பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தன் தொகுத்தளித்தார். இதில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, ஐ.நா. பாலியல் மற்றும் பாலின வன்முறை விசாரணையாளர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றி வளைப்பு உற்பத்தியாளர் தப்பியோட்டம்

  • September 18, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (16-09) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டன. இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டறியப்பட்டன. ஆனால், இந்நிலையங்களை நடத்தி வந்திருந்த சந்தேக நபர் தப்பியோடியதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்

  • September 14, 2025
  • 0 Comments

கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னர், மொத்தம் 17 சந்தேகநபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சட்டநடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் கூறினார். புதிய அரசு பதவியேற்றதையடுத்து அனைத்து ரெட் நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டதாகவும் வூட்லர் உறுதிப்படுத்தினார். சர்வதேச சட்ட அமலாக்கத்தின் சிக்கல்களை விளக்கிக் கூறிய அவர், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் மக்கள் சுமையை ஏற்கிறார்கள்- CEB

  • September 14, 2025
  • 0 Comments

எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கை மின்சார சபை போட்டி முறையிலான எரிபொருள் கொள்முதல் செயல்முறையை அறிமுகப்படுத்த முயன்றபோது, அதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, அரச நிதியை பாதுகாக்கவும், தேசிய ஆற்றல் கொள்கை மற்றும் நிர்வாக தரநிலைகளுடன் இணங்கவும், உடனடியாக போட்டி அடிப்படையிலான எரிபொருள் கொள்முதல் முறையை ஆரம்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமருக்கும பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை

  • September 13, 2025
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்நிகழ்வில் சம்பளக் குறைப்புகள், கொடுப்பனவுகள், கூடுதல் நேர ஊதியம், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் மேலும் விவாதங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனா 2026 பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல்

  • September 13, 2025
  • 0 Comments

சீனா 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசின் உதவியுடன் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையவுள்ளனர். இந்த ஒப்பந்தம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கல்வி அமைச்சு அதிகாரிகளும், இலங்கைக்கான சீன தூதரரும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியேறுகின்றார்

  • September 11, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கும் சட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன தமது உத்தியோகபூர்வ இல்லங்களைவிட்டு வெளியேறியிருந்தனர். அதேபோல், சந்திரிக்காவும் விரைவில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேற உள்ளார்.