யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.