உள்ளூர் முக்கிய செய்திகள்

71 வயது வயோதிப பெண் வற்புனர்வின் பின் கொலை

  • October 25, 2025
  • 0 Comments

மினுவாங்கொடை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வற்புனர்வுக்குட்படுத்தப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் பூசி, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பது போன்ற கொடூரச் செயல் ஒன்று பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்த வயோதிப மாதுவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அந்த பெண் தனிமையாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று (24) அயல் வீட்டுப் பெண் ஒருவர் […]

உள்ளூர்

நாட்டிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது- நீர்ப்பாசனத் திணைக்களம்

  • October 25, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், களனி, அத்தனகலு, கிங் மற்றும் பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைவீழ்ச்சியினால் களுகங்கையைச் சூழ்ந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கு துரத்தப்பட்டார் மகிந்த ராஜபக்ஸ

  • September 11, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளதாக நாமல் கூறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுத் திட்டத்தினை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

  • September 1, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியின் செயற்பாட்டை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் அவருடன் வந்த குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

பாதாள உலக கோஸ்ட்டி கைதானது; அரசியல் நாடகமாக மாறியதா? நடவடிக்கை

  • September 1, 2025
  • 0 Comments

பிரபல குற்ற உலகத் தலைவரான மனுதினு பட்மசிறி பெரேரா அமய கேஹெல்படுத்தர பட்மே மற்றும் மேலும் நால்வர் குற்றவாளிகளை கைது செய்து நாடுகடத்தி வருவித்த சம்பவம், விடுதலைப் புலிகளின் தோல்வியை விடப் பெரிய நிகழ்வாகவே அரசாங்கம் விளம்பரம் செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல் துறை மாபொலிஸ் பிரியந்த வீரசூரிய தலைமையில் மூத்த அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விரைந்து சென்று, பட்மே மற்றும் பிறரை வரவேற்று, ஊடகங்களுக்கு […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் ஆயூதங்களும் வெடிபொருட்களும் மீட்பு

  • August 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. அந்த காணியில் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் இன்று (22) நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களும் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புப் பணிகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன. இதில் யாழ்ப்பாணம் பொலிஸார், பொலிஸ் விசேட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • August 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், யாழ்ப்பாணத்துக்கென தனிப்பட்ட துறைமுகம் இல்லாததால் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், 165 மில்லியன் ரூபா செலவில் கொழும்புத் துறைமுகத்தையும் நவீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத நிலையால், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காரைதீவில் ‘நிருத்தியார்ப்பணம்’ பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது

  • August 20, 2025
  • 0 Comments

கல்முனை முத்தமிழ் கலைக்கூடம் நடத்திய இந்நிகழ்ச்சி, காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலைக்கூடத் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார். மேலும், கௌரவ அதிதிகளாக நிறுவனத்தின் நடனம் அரங்காற்றுகைத் திணைக்கள சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி, மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியல் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று அடையாள இடை நிறுத்தம்.

  • August 20, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட ஆஊயு கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையே இவ்வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கமாக அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்தவாறு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் போது ஊழியர்கள் ‘நீக்கப்பட்ட 20மூ ஐ உடனடியாக வழங்குக’, ‘அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்குக’, ‘மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்க்கிறது’, ‘அதிகரிக்கப்பட்ட வரவு செலவு முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழகங்கள் […]

உள்ளூர்

முல்லைத்தீவும் அம்பாறையும் வழமைப் போன்று இயங்குகின்றன

  • August 18, 2025
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று (18) முழு கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த போதிலும், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை பகுதிகளில் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெற்றன. வடக்கில் அதிகரித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராக இந்தக் கடையடைப்பு போராட்டத்திற்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டிருந்தார். அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆதரவு கிடைத்திருந்தாலும், அதற்கு இணையாக எதிர்ப்புகளும் எழுந்தன. எனினும், நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் […]