உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்திய துணை தூதரகத்துடன் யாழ் மீனவர்கள் கலந்துரையாடல்

  • February 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர். துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மீனவர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் போராட்டம்

  • February 27, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். ‘தாண்டாதே தாண்டாதே எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்பாணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட திடீரென மரணம்

  • February 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிர்மாய்த்துள்ளார். வண்ணார்பண்ணை – பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பூநாரிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு முதலாவது மாடியில் குறித்த நபர் மின் கம்பியிணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிதவேளை தவறுதாலாக கீழே விழுந்துள்ளார். இதன்போது அவருடன் வேலை செய்தவர்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாமல்

  • February 26, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரும் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனும் கலந்துரையாடினர்

  • February 25, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

  • February 25, 2025
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும்.வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பொதுஜன அபிப்ராயத்துக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்க தயாராகவே இருப்பிறோம். இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

  • February 23, 2025
  • 0 Comments

யாழ்.மாவட்ட செயலரின் மகன் செலுத்திச் சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று மாலை வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தொடரூந்து மீது 13 வயது சிறுவர்கள் கல் வீச்சு தாக்குதல் நடாத்தியதால் கைது!

  • February 23, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், தொடரூந்து; மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்த மூவர் நேற்று (22-02-2025) கைது செய்யப்பட்டனர். யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. தொடரூந்து வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை தொடரூந்தில் சென்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லையென அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்

  • February 22, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லை சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார் அவர் சமூக ஊடக பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படவுள்ளனர் என்ற தகவல் உண்மை என்றால்இது பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்யும் செயல், இது பயங்கரவாத குற்றமல்ல, பயங்கரவாத குற்றமல்லாதவற்றிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும்போது அதுவழமையானதாக மாற்றப்படுகின்றது, இது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!

  • February 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் கடந்த வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்ற போது இல்லங்கள் கார்த்திகைப் பூ மற்றும் பீரங்கி அமைப்பு போன்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாடசாலையின் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த விசாரணைகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இது இவ்வாறு இருக்கையில் இந்த […]