உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் படையினர் மற்றும் பொலிஸார்; வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்

  • February 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (20-02-2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ‘ யாழ் – […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை; யாழ். நீதிமன்ற நீதவான் இன்று பார்வையிட்டுள்ளார்

  • February 20, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்று பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் தொடர் போராட்டம் 8 ஆண்டுகளை எட்டியுள்ளது

  • February 20, 2025
  • 0 Comments

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று தீச்சட்டி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி வரை சென்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோசங்களை எழுப்பினர்.   […]

முக்கிய செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்தவர் தந்தை மற்றும் சகோதரiயும் தாக்கிவிட்டு வாளால் வெட்டவும் முயற்சித்துள்ளார்

  • February 19, 2025
  • 0 Comments

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று மாலை மூவர் மீது மோசமாக தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP ஊயுர் – 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் குண்டர்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை […]

முக்கிய செய்திகள்

மன்னாரில மணல் அள்ள கள விஜயம் செய்த 23 திணைக்களங்களையும் திருப்பியனுப்பிய மக்கள்

  • February 19, 2025
  • 0 Comments

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கள ஆய்வு செய்து, கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை வழங்க சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் இன்று அப்பகுதியில் கள விஜயம் செய்தபோதும் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு தடவை கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்றைய தினம் மூன்றாவது தடவையாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வை உடனடியாக நிறுத்ததுமாறு :ரவிகரன் எச்சரிக்கை

  • February 18, 2025
  • 0 Comments

மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19-02-2025) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் விருப்பமின்றி இந்த கள ஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். இதன் காரணமாக சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் உண்டாகும் என ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று […]

முக்கிய செய்திகள்

செம்மணி மனித எலும்புக்கூட்டு விவகாரம் தொடர்பில் எச்சங்கள் பொலிஸில் முறைப்பாடு

  • February 18, 2025
  • 0 Comments

  அண்மையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இந்து மயானத்திற்கான தகன மேடைஅமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் காணப்பட்டது தொடர்பில் யாழ் காவல்நிலையத்தில்இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இந்து மயானத்திற்கான தகன மேடை ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது அப் பகுதியில் பல மனித எச்சங்கள் காணப்பட்டது. அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று […]

முக்கிய செய்திகள்

வரவு செலவுத்திட்டதிலிருந்து யாழ். நூலகத்தின் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

  • February 17, 2025
  • 0 Comments

தேர்தலுக்காக ஒரு நூலகம் எரிக்கப்பட்ட கறைபடிந்த வரலாறு யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கும், நூலகத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புண்டு. பாதனிகளை கழற்றி வைத்து விட்டு தான் தமிழர்கள் நூலகத்துக்குள் செல்வார்கள். ஆகவே யாழ் நூலகத்தின் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளேன் என ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒருவரை கடத்திச் பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

  • February 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (16-02-2025) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த […]

முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில்; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே என யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • February 17, 2025
  • 0 Comments

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துவந்த தனியார் காணியில் அவர்களது அனுமதியின்றி இராணுவத்தின் பாதுகாவலில் பௌத்த விகாரை (திஸ்ஸ விகாரை) […]