முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைகழகம் மாணவன் சிவகஜனுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை பல்கலை நிர்வாகம் வாபஸ் பெற்றது

  • February 16, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாகக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வௌ;வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த வகுப்புத்தடை குறித்து, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. அதனை அடுத்து தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு […]

முக்கிய செய்திகள்

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார்

  • February 15, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று திறந்து வைத்துள்ளார் இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஶ்ரீபவானந்தராஜா , றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் கலந்துரையாடல்

  • February 12, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று (11-02-2025)நடைபெற்றது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. சுவிட்சர்லாந்து போன்று இந்நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசின் அதிகபட்ச உதவிகளை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சுவிட்சர்லாந்து தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான சுவிட்சர்லாந்தின் 2023 சட்டத்தை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், காலநிலை […]

முக்கிய செய்திகள்

கொழும்பில் போதைப்பொருள் கடத்திலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்

  • February 12, 2025
  • 0 Comments

போதைப்பொருள் சோதனைக்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார். மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், போதைப்பொருள் கடத்தலை அடுத்து முல்லைத்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரருடன் காவல்துறை அதிகாரிக்கு முறைகேடான தொடர்பு இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்ததாக தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். […]

முக்கிய செய்திகள்

யாழ். சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

  • February 11, 2025
  • 0 Comments

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் என கூறப்படுகிறது. இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருக்காக சித்தியின் நகையை திருடிய பெறாமகன் உள்ளிட்ட நால்வர் கைது

  • February 8, 2025
  • 0 Comments

போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 03 ஆம் திகதி தங்க நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வசித்து வந்த, […]

முக்கிய செய்திகள்

நெல் கொள்வனவிலிருந்து வவுனியா விவசாயிகள் தவிர்பு என விவசாயிகள் கவலை

  • February 6, 2025
  • 0 Comments

வவுனியா நெற் சந்தைப்படுத்தல் சபையினால் இன்று நெற்கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் வவுனியா மாவட்டத்தில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடம் இருந்து இன்று நெல்லினை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் நெல் கொள்வனவிற்கான நிதி தமக்கு கிடைக்காமையினாலேயே நெற்கொள்வனவினை முன்னெடுக்கவில்லை என்றும், திங்கட்கிழமைக்கு பின்னரே நெற் கொள்வனவினை மேற்கொள்ள முடியும் என நெல் சந்தைப்படுத்தும் சபையினர் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிக்கு வேலை கிடைக்கவில்லை தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

  • February 5, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் நேற்று (4-02-2025 ) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […]

முக்கிய செய்திகள்

யாழ் சிறைச்சாலையிலிருந்து பெண் உட்பட 17 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!

  • February 4, 2025
  • 0 Comments

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். 77ஆவது சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியினது பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

அதிக போதையால் யாழ் இளைஞன் உயிரிழப்பு

  • February 3, 2025
  • 0 Comments

அதீத போதை காரணமாக சுகயீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென சுகவீனமுற்று யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக போதையின் போது […]