உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் கரையொதுங்கினார் புத்தர்!

  • January 15, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15) அதிகாலை 3 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்ட நிலையில், மிதவை படகில் புத்த சமய அடையாளங்கள் காணப்படுவதால் மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என மக்கள் […]

முக்கிய செய்திகள்

யாழில் மணல் அகழ்விற்கு போலி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

  • January 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபரொருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் மீட்டிருந்தனர். கைதான நபரிடம் மேலதிக […]

முக்கிய செய்திகள்

யாழில் விபத்து வயோதிபர் உயிரிழப்பு

  • January 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் வட்டு க்கோட்டையைச் சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளார்

முக்கிய செய்திகள்

யாழ் மீனவர்களின் வலைகளை அழித்த இந்திய இழுவைப் படகுகள்

  • January 9, 2025
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில்; இந்திய இழுவைப் படகுகள் ஈடுபட்டதால் சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய […]

உள்ளூர்

அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா!

  • January 7, 2025
  • 0 Comments

அன்னை , சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது இன்று காலை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வு மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து அம்மையாரின் திருவுருவப்படம் தாங்கிய சிறப்பு ஊர்வலத்தை தொடர்ந்து அம்மையாரின் நினைவாலய வழிபாடு, உருவச்சிலைக்கான மரியாதையளித்தில் தொடர்ந்து மண்டப நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின ஆசியுரைகளை மாவை ஆதீனம் முதல்வர் மகாராஜஸ்ரீ […]

உள்ளூர்

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு! (நேரலை)

  • January 7, 2025
  • 0 Comments

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. 2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம், இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளைஇ இந்த வாரத்திற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் நடைபெறவுள்ளதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குகள் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் […]

உள்ளூர்

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது- யாழ் வணிகர் கழகம்

  • January 2, 2025
  • 0 Comments

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். உள்ளூர் வெளியூர் அரிசிகளின் விலை மற்றும் தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலை […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)31.12.2024

  • January 1, 2025
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒதுங்கியது திருகோணமலையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறி நடைப்பெற்றது யூ ரியூப் சனலை மீட்க முடியவில்லை- பொலிஸ் ஊடகப் பிரிவு 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பொலிஸிக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்ஸ் அச்சக திணைக்கள இணையம் மீதும் சைபர் தாக்குதல் https://youtu.be/cUcX_A02X8g

உள்ளூர்

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலன் குறித்து முக்கிய முடிவு

  • December 28, 2024
  • 0 Comments

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்கள் குறித்து நிவர்த்தி செய்யும் குழுவின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், பூர்த்தி செய்யப்படாத […]

உள்ளூர்

யாழில் எலி காய்ச்சலினால் இருவர் உயிரிழப்பு

  • December 27, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் 25ம் திகதியும் உயிரிழந்துள்ளனர மூன்று மாத குழந்தை 26 ம் திகதியும் உயிரிழந்துள்ளனர். ;பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வியாழக்கிழமை (26) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கடந்த 24 ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுபவதற்காக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை 25 ஆம் […]