வவுனியாவில் விபத்து ஒருவர் பலி ஒருவர் காயம்
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் யாழ். அராலி பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். […]