உள்ளூர்

யாழில் தொடர் மழையால் 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • November 23, 2024
  • 0 Comments

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் வசிக்கும் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட […]

உள்ளூர்

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  • November 23, 2024
  • 0 Comments

இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.   சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். […]

உள்ளூர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்த்தர் மரணம்

  • November 19, 2024
  • 0 Comments

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 59 வயதுடைய குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் மின்சார தாக்கியதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்

வவுனியாவில் மனைவியின் தாயின் வாயில் வெடி வைத்தார் மருமகன்

  • November 5, 2024
  • 0 Comments

  வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடியன் துவக்கு என அழைக்கப்படும் நாட்டு துப்பாக்கியுடன் மாமியின் வீட்டிற்கு சென்ற மருமகன் மாமியில் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளாhர். படுகாயமடைந்த 54 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்  

உள்ளூர்

யாழ்ப்பாணம், வல்லை – அராலி வீதியை முற்றாக திறக்க வேண்டும் என பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • November 1, 2024
  • 0 Comments

வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 3 தசாப்தத்திற்கு மேல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதி இன்று (01) திறந்து விடப்பட்டது எஞ்சிய வீதி இராணுவ இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே காணப்படுகிறது. அதனையும் தேர்தலுக்கு முன் மக்கள் பாவனைக்கு விடுவிக்க […]

உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

  • October 22, 2024
  • 0 Comments

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகம்

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க ஹமாஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறது.

  • October 19, 2024
  • 0 Comments

  பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.இதில் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் தலைவர் யாஹியாசின் வாரை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது. சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்பு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாஹியா சின்வாரும் கொல்லப்பட்டார் யாஹியா சின்வார் உயிரிழந்ததை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது. இதையடுத்து இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க […]