உள்ளூர் முக்கிய செய்திகள்

வடகிழக்கு கடையடைப்பு போராட்டத்திற்கு யாழ். பல்கலை மாணவர்கள் ஆதரவில்லை- ஒன்றிய செயலாளர்

  • August 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு–கிழக்கு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்று ஒன்றிய செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது, தனிப்பட்ட அரசியல் கட்சியின் அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு அளிக்க முடியாது. கடையடைப்பிற்கு அழைப்பு விடுவதற்கு முன், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும். பின்னர் பொதுவான திகதியில் மட்டுமே அறிவிப்பு விடப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுயமாக […]

உள்ளூர்

புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனம்!

  • August 12, 2025
  • 0 Comments

நாட்டின் 37ஆம் பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி அங்கீகாரம் வழங்கியது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர்

யாழ் கொடிகாமத்தில் ஏ9 வீதியில் டிப்பர், லொரி, கார்…. விபத்து ஒருவர் பலி, பலர் காயம்

  • August 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியது. உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் வந்த […]

உள்ளூர்

யாழ் நெடுந்தீவில் கத்திக்குத்து ஒருவர் பலி, நால்வர் படுகாயம்’

  • August 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் மீது பலமுறை கத்திக்குத்து நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலாளியை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உட்பட நால்வருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் மேற்கொண்ட நபர் சம்பவத்திற்குப் […]

உள்ளூர்

யாழில் 16 வயது மாணவி பரிதாபகரமாக உயிரிழப்பு, கிராமமே அதிர்ச்சி

  • August 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயதுடைய சந்திரானந்தன் வர்ணயா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சில நாட்களில் மயக்க நிலையை அடைந்தார். தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அவர், வெள்ளிக்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலத்தைச் சார்ந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் நிறுவ முயற்சி,வலிகாமம் தெற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பு

  • July 31, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் ஒன்றை நிறுவும் முயற்சி தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் அறிவித்துள்ளார். சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றதாகவும், அதில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கந்தரோடை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்தர்கள் தொடர்ந்து பார்வையிட்டு வருவதாகவும், பிக்கு ஒருவர் தனியாரிடமிருந்து காணியை வாங்கி பௌத்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 27 வயது இளைஞன் மர்ம மரணம். பாம்பு தீண்டியதா?

  • July 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 27 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் கண்டரியப்பட்ட நிலைமையின் அடிப்படையில்இ குறித்த இளைஞர் அருகிலுள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பும் வழியில்இ வீட்டின் முன்புறம் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் உடனடியாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றும்இ அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இறந்தவர் செல்வச்சந்திரன் மிமோஜன் என […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு இளைஞர் காயம்.

  • July 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்று (29-07) செவ்வாய்க்கிழமை மாலை இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முச்சக்கரவண்டியில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பல் அவரை வழிமறித்து வாளால் வெட்டிக் காயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த இளைஞர் வீதியில் சென்ற பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக […]

உள்ளூர்

யாழ் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேரின் ஆட்கொணர்வு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

  • July 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரை தொடர்புடைய ஆட்கொணர்வு மனு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் வருவதால், வழக்கு அங்குள்ள நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இவ்வழக்கிற்கு இன்று (30) தீர்ப்பு வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், நீதிவான் விடுமுறையில் இருந்த காரணத்தினால், தீர்ப்பு வழங்கும் நாள் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சகோதரன் கொலை சகோதரி மீது சந்தேகம்- பொலிஸார்

  • July 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் முதலாம் ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர், தனது சகோதரியுடன் வசித்து வந்த வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது 56 வயதுடைய சகோதரி, நபர் கொல்லப்பட்டதற்கான சூழ்நிலையை விளக்கும் வகையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இரவு மூவர் வீட்டுக்குள் வந்து தண்ணீர் கேட்டதாகவும், தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றபோது அவர்கள் தன்னை கட்டிப்போட்டு நகைகளை […]