உள்ளூர்

வவுனியாவில் ஒருவரின் மரணத்தையடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பில் மேலும் 5 பேர் கைது

  • July 19, 2025
  • 0 Comments

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில், மேலும் ஐந்து பேர் நேற்று (18-07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். அன்றைய இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்த நிலையில், அந்த மரணத்திற்கு பொலிசார் காரணம் எனக் கூறிய குழுவினர் குழப்பத்தை ஏற்படுத்தி, பொலிசாரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைக்காக அங்கு சென்ற பொலிசாரை அப்பகுதியிலிருந்த மக்கள் தாக்கியதுடன், அந்த சம்பவத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தாதியர் பற்றாக்குறை தீர்வுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்

  • July 15, 2025
  • 0 Comments

சுகாதாரத் துறையில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை மையமாகக் கொண்டு, புதிய ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியாகும் என அமைச்சரவை பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். மருத்துவ துறையில் தாதியர் சேவை தீவிரமடைந்துள்ள நிலையில், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் 33 வைத்தியசாலைகளில் ஒருவரும் தாதியர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தீர்வாக, 2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 2650 […]

கட்டுரை

நட்புகள் உண்மையாகவே அனைத்தும் தானா?

  • July 14, 2025
  • 0 Comments

பல நேரங்களில் அது உண்மையாகவே உணரப்படுகிறது, அல்லவா? புத்தர் காலத்தில் நடந்த ஒரு அழகான நிகழ்வை இந்தக் கருத்துடன் நினைவுகூரலாம். ஒரு நாள் ஆனந்த தேரர், “பகவனே, நல்ல நண்பர்கள், நல்ல உறவினர், நல்ல தோழர்கள் ஆகியோர் ஆன்மீக வாழ்வின் பாதியைக் கொண்டவர்களே என நினைக்கிறேன்” எனக் கூறினார். அதற்கு புத்தர் பதிலளிக்கும்போது, “இல்லை ஆனந்தா, இப்படிப் பேசாதே. நல்ல நண்பர்கள், நல்ல உறவினர், நல்ல தோழர்கள் என்பதே முழுமையான ஆன்மீக வாழ்வு” என்றார். இது ஒரு […]

உள்ளூர்

யாழில் மனைவி தாய்வீட்டிற்கு சென்றதால் கணவன் உயிர்மாய்ப்பு

  • July 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இன்று முதல் தினமும் தொடரூந்து சேவை

  • July 7, 2025
  • 0 Comments

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி […]

உள்ளூர்

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் உயிரிழப்பு நண்பர்கள் தலைமறைவு

  • July 4, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் […]

உள்ளூர்

யாழ். செம்மணியில் மேலும் 3 மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • June 28, 2025
  • 0 Comments

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த […]

உள்ளூர்

செம்மணியில் மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • June 27, 2025
  • 0 Comments

யாழ் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது […]

உள்ளூர்

யாழ். மாநகர சபையில் அடிபாடு ஆரம்பம்

  • June 27, 2025
  • 0 Comments

யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்போது, மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சபையில் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

உள்ளூர்

யாழ் செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..!

  • June 26, 2025
  • 0 Comments

யாழ் செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் இன்று (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய இன்று (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் […]